இன்றைய இளைய தலைமுறை – மாற்றங்கள், சவால்கள் மற்றும் எளிய வழிகள்!
இளம் தலைமுறை என்பது எந்த ஒரு சமூகத்தின் எதிர்காலத் தளம். அவர்கள் சிந்திக்கும் விதம், நடத்தும் விதம், கனவுகள் அனைத்தும் நாளைய சமூகத்தின் வடிவத்தை தீர்மானிக்கின்றன. ஆனால் இன்று உலகம் வேகமாக மாறுகிறது — தொழில்நுட்பத்தின் எழுச்சி, போட்டி நிறைந்த கல்வி முறை, சமூக ஊடகங்களின் தாக்கம் போன்ற பல மாற்றங்கள் இளையோரின் மனத்தையும் நடத்தைையும் ஆழமாக பாதிக்கின்றன. இந்த மாற்றங்களில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அதற்கான எளிய தீர்வுகளையும் பார்க்கலாம்.
உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்கள் இளமை என்பது உடல், மனம், உணர்ச்சி ஆகிய அனைத்தும் மாற்றமடையும் பருவம். மாதவிடாய் தொடங்குதல், உடல் வடிவ மாற்றம், தோல் மற்றும் முடி பிரச்சினைகள் போன்றவை இயல்பானவை. ஆனால் “நான் சரியாக இருக்கிறேனா?” என்ற கேள்வி, சமூக மீடியா ஒப்பீடுகள் மூலம் ஒரு தன்னம்பிக்கை குறையை உருவாக்குகின்றன. இப்பொழுது வரும் ரிலீஸ்கலெல்லாம் effects மற்றும் filters செய்து வருவதால் ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தை பெரிதும் விரும்புகின்றனர்… குழந்தைகள் தங்கள் தோற்றத்தை மற்றவர்களோடு ஒப்பிட்டு மனஅழுத்தத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை இயல்பாகப் புரிந்துகொண்டு, உடல் மாற்றங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான் என்பதை உணர்த்த வேண்டும்.
கல்வி மற்றும் போட்டி அழுத்தம் இன்றைய கல்வி அமைப்பில் மதிப்பெண்கள் மற்றும் தேர்வுகள் வாழ்க்கையின் மையமாக மாறிவிட்டன. மாணவர்கள் எதிர்கால வேலைவாய்ப்பு, மதிப்பெண், எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். சிலருக்கு burnout ஏற்படுகிறது; சிலர் தோல்வியை சமாளிக்க முடியாமல் மனஅழுத்தத்தில் சிக்குகிறார்கள். இதற்கு “எப்படி படிக்கிறாய்?” என்று கேட்பதற்குப் பதிலாக “நீ இன்று எப்படிக் களிப்பாக இருந்தாய்?” என்று கேட்கும் மனநிலை தேவை. ஆசிரியர்கள் 25-5 விதியில் மாணவர்கள் ஓய்வு எடுக்க அனுமதிக்கலாம். இது அவர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் அதிகரிக்கும்.
கோபம் மற்றும் உணர்ச்சி வெடிப்புகாலப்போக்கில் இளையோரின் மனநிலைகள் வேகமாக மாறுகின்றன. சிறிய விஷயங்களுக்கே கோபம், மனச்சோர்வு, கவனம் குறைவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. சமூக ஊடகங்கள் தொடர்ந்து அவர்களை வெளிப்படுத்தும் அழுத்தத்தால், அவர்களின் உணர்ச்சி சமநிலை மீறப்படுகிறது. இதற்கு ஆழ்ந்த மூச்சு விடுதல், சில நிமிடங்கள் தண்ணீர் குடித்து நடப்பது போன்ற சிறிய வழிமுறைகள் பயனுள்ளதாக இருக்கும்.
டிஜிட்டல் அடிமைத்தனம் — ஒரு புதிய அபாயம் இன்று “Screen Time” என்பது குடும்பம் ஒவ்வொன்றிலும் பேசப்படும் முக்கிய சொல். ஸ்மார்ட் போன்கள், சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் கேம்கள் — இவை அனைத்தும் இளையோரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டன. ஆனால் அதே சமயம், இது அவர்களின் தூக்க நேரத்தை, கவனத்தை, உணவு பழக்கங்களை, உடல் இயக்கத்தைக் குறைத்துள்ளது. மிக முக்கியமாக, ஆன்லைன் கேம்களின் தாக்கம் ஒரு தீவிர பிரச்சினையாக உருவாகியுள்ளது. சில கேம்கள் ஆவேசம், வன்முறை, தாக்குதல் மனநிலை போன்றவற்றை தூண்டுகின்றன. இவை குழந்தைகளில் அதிரடி சிந்தனையை வளர்த்தாலும், சில சமயங்களில் ஆக்கிரமிப்பு நடத்தை (Aggression) உருவாக்கும் ஆபத்தும் உள்ளது.
அடிக்கடி கேமிங் செய்வது மூளையில் dopamine அதிகம் உற்பத்தியாகச் செய்கிறது, இதனால் மற்ற செயல்களில் ஆர்வம் குறைகிறது. இதன்பின் ஒரு நேர்மையான வாழ்க்கை சமநிலை குலைகிறது.இதற்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய சிறிய ஆனால் சக்திவாய்ந்த முயற்சிகள் — வாரத்தில் சில மணி நேரம் “டிஜிட்டல் டிடாக்ஸ்” (மொபைல் இல்லா நேரம்), குடும்பம் சேர்ந்து விளையாடுதல், உடற்கல்வி மற்றும் வெளி விளையாட்டுகளை ஊக்குவித்தல் போன்றவை.
சமூக ஒப்பீடு மற்றும் ஊடக அழுத்தம் சமூக ஊடகங்களைப் பார்க்கும் ஒவ்வொரு இளையரும், “போஸ்ட் செய்வதற்குரிய” வாழ்க்கையை நடத்த முயற்சிக்கிறார்கள். likes, comments, followers என்பவை தங்கள் தன்மதிப்பை (self-worth) அளக்கும் அளவுகோலாக மாறியிருக்கிறது. இது FOMO — “Fear of Missing Out” எனப்படும் ஒரு மனநிலையை உருவாக்குகிறது. அதனால் அவர்கள் நிஜ வாழ்க்கையிலுள்ள மகிழ்ச்சியை மரவுகின்றனர்.
இதனை குறைக்க, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, தன்னம்பிக்கையை வளர்க்கும் பொழுதுபோக்குகளைப் பின்பற்றுவது முக்கியம். குடும்ப மற்றும் மனித உறவுகள்இன்றைய வேகமான வாழ்க்கையில் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே ஒரு உணர்ச்சி தூரம் உருவாகியுள்ளது. பிள்ளைகள் “அதை சொல்லவே முடியாது” என்பதற்கான மனநிலையுடன் வளர்கிறார்கள். இதனால் அவர்களின் உள்ளுணர்வுகள் தடுக்கப்படுகின்றன.
பெற்றோர்கள் தினமும் குறைந்தது 5 நிமிடம் குழந்தையுடன் தனிப்பட்ட உரையாடல் நடத்த வேண்டும். தொலைபேசி இல்லாமல் “இன்று என்ன நடந்தது?” என்று கேட்பது போல் எளிய வழிகள் மன உறவை வலுப்படுத்தும். பள்ளிகளிலும் ஆசிரியர்களிலும் மாற்றம் ஆசிரியர்கள் மாணவர்களை புத்தக அறிவால் மட்டுமல்லாமல் மனநலத்திலும் வழிகாட்ட வேண்டும். வாரம் ஒரு முறை மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளை பகிர சொல்ல எந்தவொரு திறந்த உரையாடல் நேரமும் வழங்கப்படலாம். இது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
பாடங்கள் இடையே சிறிய ஓய்வுகள், வெளியில் நடைபயிற்சி, குழு செயல்பாடுகள் ஆகியவை மனநிலையை உயரும்.மனநலம் மற்றும் உதவி தேடும் திறன்மனநலம் குறித்த விழிப்புணர்வு இன்னும் முழுமையாக சமூகத்தில் வேரூன்றவில்லை. anxiety, depression, panic attacks, OCD போன்ற பிரச்சினைகள் இன்று பள்ளி மாணவர்களிடமே காணப்படுகின்றன. இதனை மறைப்பதற்குப் பதிலாக, அதனை திறந்த மனதுடன் பேசும் சூழல் அவசியம். உதவி தேடுவது ஒரு பலவீனம் அல்ல, அது ஒரு விழிப்புணர்வு அடையாளம் என்பதை இளையோர்களுக்கு எடுத்துரையிட வேண்டும்.
எளிய வழிமுறைகள் — சின்ன முயற்சிகள், பெரிய மாற்றங்கள்
தினமும் 5 நிமிடம் மனதளவில் ஓய்வு எடுக்கவும். மூச்சு பயிற்சி: 5 வினாடி இழு, 5 வினாடி பிடி, 5 வினாடி விடு.தினம் 3 விஷயங்களுக்கு நன்றி சொல்லவும்.கோபம் வந்தால்: 3 பொருட்களை பாருங்கள், 2 ஆழ்ந்த மூச்சு விடுங்கள், 1 நிமிடம் நடக்கவும்.ஒவ்வொரு இரவும் தொலைபேசி இல்லாமல் குடும்ப உரையாடல்.நாளைக்கு செய்ய வேண்டிய 3 முக்கிய காரியங்களையே எழுதுங்கள்.
முடிவில் — புரிதலும் அன்பும் தான் தீர்வு இளமையின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் அன்பு, கவனம், புரிதல் ஆகியவற்றால் உருவாகிறது. பெற்றோர்கள் புரிந்துகொள்ளும் நெஞ்சமும், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தும் குரலும், சமூகம் அளிக்கும் ஆதரவும் சேர்ந்தால், ஒவ்வொரு இளம் மனமும் பிரகாசிக்கலாம். அவர்களை ஒப்பீடுகளில் அல்ல, வளர்ச்சியில் மதிப்போம். அவர்களின் பயணத்தில் நாம் ஊக்கமாக நிற்கும் போது, அந்த தலைமுறைதான் நாளைய வலிமையான, நம்பிக்கையுள்ள இந்தியாவை உருவாக்கும்.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.