அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026…

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026 விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ஒன்றியம், மாவட்ட மற்றும் மாநில அளவில் தடகளம், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் (Tug of War) ஆண்/பெண் இருபாலருக்கும், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (Street Cricket) ஆண்களுக்கும், எறிபந்து விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கும் மற்றும் நேரடி மாவட்ட அளவில் ஓவியப்போட்டி மற்றும் கோலப்போட்டி ஆண்/பெண் இருபாலருக்கும், மாற்று திறனாளிகளுக்கு 100 மீ, குண்டு எறிதல் தடகள போட்டிகள் பின்வரும் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படவுள்ளது.

போட்டி முன் பதிவு:

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://cmyouthfestival.sdat.in. https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்திட கடைசி நாள் 21.01.2026 ஆகும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒன்றிய அளவிலான போட்டிகள் 22.01.2026 முதல் 25.01.2026 வரை. மாவட்ட அளவிலான போட்டிகள் 30.01.2026 முதல் 01.02.2026 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலும் மற்றும் மாநில அளவிலான போட்டிகள் 06.02.2026 முதல் 08.02.2026 வரை சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

போட்டிகளில் கலந்து கொள்ள விதிமுறைகள்:

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வயது வரம்பு 16 வயது முதல் 35 வயது வரை ஆகும். 01.01.1991 பிறகு அல்லது 31.12.2009 க்கு உட்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக அல்லது போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரடி பதிவு மேற்கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் அவரவர் ஒன்றியத்தில் மட்டுமே ஆதார் அடிப்படையில் பங்கேற்க இயலும். ஒரு வீரர் அதிகபட்சமாக 2 தடகளப் போட்டிகளிலும், கூடுதலாக 2 விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஒன்றியத்தில் முதல் இடத்தில் வெற்றி பெற்றவர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்.இ.ஆ.ப.,  தெரிவித்துள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.