100 கோடி சொத்து குவித்த சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !

0

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் மற்றும் மனைவிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை !
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் சார்பதிவாளர் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தும் அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறும் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.

இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவின் சார்பில் செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார் பேட்டை, பில்லாதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் மகன் ஜானகிராமன் (வயது.79). இவர் சார்பதிவாளராக பணிபுரிந்தவர். இவர் சார்பதிவாளராக பணிபுரிந்த 1989-1993 காலத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் ஆகிய முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட இடங்களில் இவர் பணிபுரிந்த போது, அவரது வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமான வகையில் இவரது பெயரிலும், இவரது மனைவி திருமதி.வசந்தி (வயது65) பெயரிலும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் அப்போதைய மதிப்பு ரூ.32,25,532/= (ரூபாய் முப்பத்தி இரண்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்து ஐநூற்றி முப்பத்தி இரண்டு மட்டும்) 98% ஆகும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததன்பேரில், கடந்த 17.08.2001 அன்று அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவில் காவல் ஆய்வாளர் அம்பிகாபதி அவர்களால் வழக்கு தொடுக்கப்பட்டு புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர்விசாரணையை தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சிறப்பு அரசு வழக்குறைஞர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் சேவியர்ராணி மற்றும் உதவி ஆய்வாளர் .பாஸ்கர் ஆகியோர்களால் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த இந்த வழக்கில், விசாரணை முடிவுற்று இன்று (25.04.2024) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.கார்த்திகேயன் அவர்களால், குற்றவாளி(1) ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி குற்றவாளி(2)வசந்தி ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், மேற்படி வருமானத்திற்கு அதிகமாக குற்றவாளிகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்குமாறும் அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

மேற்படி சார்பதிவாளர் ஜானகிராமன், அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 100 கோடிக்கும் மேலாகும் என தெரியவருகிது.” என்பதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அங்குசம் செய்திப்பிரிவு

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.