மணல் கொள்ளையர்களுக்காக இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக எம்எல்ஏ..
மணல் கொள்ளையர்களுக்காக இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக எம்எல்ஏ..
திருச்சி புறநகர் காவல் நிலைய சமயபுரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்து வருபவர் முத்து. இவர் நேற்று 19/06/2021 உத்தமசீலி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு டிப்பர் லாரியில் வயல் மண் ஏற்றிவந்த லாரிகளை மடக்கிப் பிடித்தார்.
அதில் மணல் ஏற்றி வந்த லாரிகள் சரியான உரிமம் இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக மணல் எடுத்துச் செல்வது தெரியவந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் லாரிகளை கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு எடுத்துக் வந்து வழக்குப் பதிவு செய்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் முத்து எடுத்த நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக கோயில் நகரத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் யாரை கேட்டு லாரிகள் மீது வழக்கு போட்ட, உன்னை யாரு வழக்கு போட சொன்னது, உன்னைய டிரான்ஸ்பர் பண்றனா இல்லையான்னு பாரு என்று கம்பீரக் குரலில் போன் காலில் எச்சரிக்கும் விதமாக பேசி வைத்துள்ளார். அந்த கோவில் நகர எம்எல்ஏ.
இதனால் இன்ஸ்பெக்டர் என்னடா இது சட்டத்தை காப்பாத்துருதா இல்லனா இது மாதிரியான கரை சட்டை போட்டவங்கல காப்பாற்றுவதா என்று புலம்பியபடியே சென்றுள்ளார்.
பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரு மக்களின் பிரதிநிதியாக எம்எல்ஏ போலீசாரிடம் பேசுவதோ, காவல் நிலையம் செல்வதோ வரவேற்கதக்கது. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் மணல் திருட்டு போன்ற செயல்களுக்கு ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏ காவலர்களை கண்டிக்கும் விதமாக மிரட்டுவது சம்பந்தப்பட்ட எம்எல்ஏ-வுக்கு மட்டுமல்ல அவருடைய கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் அவப்பெயரையே உண்டாக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..
–ஜித்தன்