அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

16 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி? எம்.பி. துரை.வைகோ சொல்வது என்ன?

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி – பொன்மலை பகுதியில் ஜி-கார்னர் என்ற இடத்தில், உயர்மட்ட சுழற்பாலம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது, நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்குப்பிறகு, இத்திட்டம் சாத்தியமாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தான் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், திருச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி திமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ.

துரை வைகோ
துரை வைகோ

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய G CORNER பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் (Elevated Rotary) அமையப்போவது உறுதியானது! திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு விடியல் கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழற்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து, தடையில்லா சான்றிதழை வழங்கி, எனது தொடர் முயற்சிக்கு மகுடம் சூட்டியது! சென்னையிலிருந்து திருச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது! என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட G-கார்னர் சுழற்பாலம் ஓர் சாதனையாக எனக்கு நிறைவை தருகிறது! எனது அரசியல் பயணத்தில் இப்பாலம் என் பேர் சொல்லும் வரலாறாய் நிலைக்கப்போகிறது! எனது திருச்சி தொகுதி மக்களின் இதயத்தில் நிரந்தரமான ஓரிடம் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது!

நாடாளுமன்ற உறுப்பினராக நான் பொறுப்பேற்று, எனது திருச்சி தொகுதி மக்களுக்காக இதுவரை நான் ஆற்றிய கடமையின் உச்சமாகவும், இதுவரை அடைந்த வெற்றிகளில் முதன்மையானதாகவும் நான் கருதும் இந்த வெற்றிச் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதல்வர் பிறந்தநாள்

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற குறள் எனக்குக் கற்றுத்தந்த விடாமுயற்சியை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எனது திருச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாய் விளங்கவும் நான் பயன்படுத்தி வருகிறேன்.

Trichyதிருச்சி மக்களின் ஓராண்டுக் கால கோரிக்கையா என்றால் இல்லை; சில ஆண்டுகால கோரிக்கையா என்றால் அதுவும் இல்லை; திருச்சி மக்கள் சுமார் 16 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக வைத்திருந்த கோரிக்கை இது; திருச்சி மாநகரத்திற்கான போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பிற்காக, மக்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காக முன்வைத்திருந்த மிக முக்கியத் திட்டமும் இதுவே.

நமது இடைவிடாத முயற்சியாலும், தொடர்ந்து ஆற்றிய பணியாலும், திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி மாநகரில் பொன்மலைப் பகுதியில் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் (Elevated Rotary) அமைக்கும் திட்டப் பணிக்கு, 13.03.2026 தேதியிட்ட இரயில்வேத் துறையின் தடையில்லாச் சான்று (NOC) தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (NHAI) இரயில்வே நிர்வாகம் (Railway Board) வழங்கியுள்ளது என்பதை பெருமிதத்தோடு தங்களிடம் தெரிவிக்கவே இப்பதிவை எழுதுகிறேன்.

இந்தத் தருணத்தில், இந்தக் கோரிக்கைக்காக நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன்.

திருச்சி மாநகரில் தேசிய நெடுஞ்சாலை–38 இல் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பு கடந்த 16 ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டேன்.

11.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் இந்த பிரச்சினையை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தேன்.

News image26.01.2025 அன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் G-கார்னர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன்.

22.02.2025 அன்று நில அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததுடன், 27.02.2025 அன்று எனது ஏற்பாட்டில் NHAI மற்றும் இரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்திற்குத் தேவையான நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த திட்டம் விரைவில் முன்னேற வேண்டும் என்பதற்காக 06.02.2025, 19.08.2025 மற்றும் 19.12.2025 ஆகிய தேதிகளில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து திட்டத்தின் அவசரத் தேவையை எடுத்துரைத்து விரைந்து செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தினேன்.

மேலும் 23.04.2025 அன்று மேம்பாலம் அமைப்பதற்காக தேவையான இரயில்வே நிலத்தை மாற்றித் தருமாறு தெற்கு இரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை வைத்தேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

14.07.2025 அன்று திருச்சி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM, NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் 25.08.2025, அன்று புதிதாக பதவியேற்ற தற்போதைய திருச்சி இரயில்வே கோட்ட மேலாளராக திரு. பலக் ராம் நேகி அவர்களை சந்தித்து, பின்னர் 26.08.2025 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை அவரை சந்தித்து விளக்கி, 26.09.2025 மற்றும் 05.12.2025 ஆகிய தேதிகளில் ரயில்வே நில ஒதுக்கீடு மற்றும் NOC வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கடிதங்கள் அளித்து நடவடிக்கை எடுத்தேன். மேலும் 10.12.2025 அன்று டெல்லியில் ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து இந்த திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினேன்.

இதன் தொடர்ச்சியாக 29.01.2026 அன்று திருச்சி DRM அலுவலகத்தில் NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகரை வரவழைத்து ஆலோசனை நடைபெற்றது.

அடுத்த நாளான 30.01.2026 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திருச்சி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட ஆலோசகரை மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலரின் அனுமதியுடன் அழைத்துச் சென்று சென்னை தெற்கு இரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் GM அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

பின்னர் 04.02.2026 மற்றும் 13.02.2026 ஆகிய தேதிகளில் ஒன்றிய இரயில்வே அமைச்சர் அவர்களை மீண்டும் சந்தித்து திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். மேலும் 06.02.2026 அன்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களை சந்தித்து திட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

அதன் பின்னரும் 22.02.2026 மற்றும் 07.03.2026 ஆகிய தேதிகளில் திருச்சி DRM அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டேன்.

எனது இந்த தொடர் முயற்சிகளின் விளைவாக தற்போது திருச்சி மாநகரில் G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இரயில்வே நிர்வாகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC – No Objection Certificate) வழங்கியுள்ளது என்பது மிக முக்கியமான முன்னேற்றமாகும்.

இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,
இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்,

இந்த முயற்சிக்கு ஆதரவளித்து நடவடிக்கை எடுத்த ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ், இரயில்வே வாரியம், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா, திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் (DRM), தெற்கு இரயில்வே பொதுமேலாளர் (GM) மற்றும் NHAI திருச்சி திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உயர்மட்ட சுழற்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தவுடன், திருச்சி மாநகரின் நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதோடு, இத்தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் அப்பகுதி மக்களின் உயிர்ப் பாதுகாப்பும் உறுதியாகும்.

மேலும், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் திருச்சி வழியாகப் பயணிக்கும் அனைத்து மக்களின் பயணமும் பாதுகாப்பாகவும் சீராகவும் அமையும் என்பதால், இப்பாலம் திருச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கே மிக முக்கியமான பாலமாகத் திகழும் என உறுதியாக நம்புகிறேன்.

I consider this achievement as an important milestone in my political journey.

இது, எனது மக்கள் பணிக்கான அரசியல் பயணத்தில் ஒரு  மைல்கல்லாகவே நான் கருதுகிறேன்.” என்பதாக குறிப்பிடுகிறார், எம்.பி. துரை.வைகோ.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.