அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தார் பூசி அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துகள் ! மே 17 இயக்கத்தினர் மீது வழக்குப்பதிவு…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் ரயில்வே நிலையத்திற்கு வந்த – மே17 இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த அணைத்து பெயர்ப் பலகைகளில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை மட்டும் குறிவைத்து கருப்பு தார் பூசி அழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

Erasing of Hindi Scriptஇச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில் நிலைய மேலாளர் உடனடியாக ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர்(RPF) தார் பூசப்பட்ட பெயர்ப்பலகைகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

Erasing of Hindi Scriptஇந்தச்சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக மே 17அமைப்பைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது ரயில்வே சட்டப் பிரிவுகள் 147 அத்துமீறி நுழைதல் 145பி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் 166 ரயில்வே சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தப்பியோடிய நபர்களைப் பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.