திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்… யார் இந்த MMM முருகானந்தம்!

0

பன்னாட்டு ரோட்டரி என்பது 119 ஆண்டுகளை கடந்து சமூக சேவையை நோக்கமாக வைத்து 1.4 மில்லியன்உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச அமைப்பாகும். 1905 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, ரோட்டரியின் செயலாக்க உறுப்பினர்கள் உலகளவில் 46,000க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலம் “தன்னைவிட மேலானது சேவை” என்ற முதன்மை நோக்கத்தோடு, ரோட்டரியின் 7 Areas of Focus எனப்படும் ஏழு முக்கிய இலாக்காகளில் பெரும் சேவையாற்றி வருகிறது.

ரோட்டரியின் உயிர்நாடியாக திகழும் ரோட்டரி அறக்கட்டளை 1917 ஆண்டு நிறுவப்பட்டு, உறுப்பினர்கள் வழங்கும் நன்கொடைகளை உலக அமைதி மற்றும் சமாதானத்தை மேம்படுத்துதல், கல்வி வழங்குதல், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாத்தல், சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்காக 4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் இந்நாள் வரை வழங்கியுள்ளது.
2 dhanalakshmi joseph

இந்தியா தனது முதல் ரோட்டரி கிளப்பை 1920-ல் கல்கத்தாவில் தொடங்கியது, அதன் பின்னர், அது ரோட்டரி இன்டர்நேஷனலில் ஒரு பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர்களாக இதுவரைநான்கு இந்தியர்கள் இருந்துள்ளனர்.   இந்தியாவில், 41 ரோட்டரி மாவட்டங்கள் உள்ளன, மேலும் 4,564 கிளப்கள் ,  1.7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு உலகளவில் ரோட்டரியில்  மூன்றாவது பெரிய ஆதரவாளராக இந்தியா விளங்குகிறது. ரோட்டரி இன்டர்நேஷனலின் பணிகளுக்கு வழிகாட்டுவதில் இந்தியா எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டும் பல இந்தியத் தலைவர்கள் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்:

ரோட்டரியில் 17 உறுப்பினர்களை கொண்ட இயக்குனர் குழு இந்த சர்வதேச அமைப்பின் கொள்கைகளை நிறுவுகிறது. ரோட்டரியின் மேல் மட்ட வாரியத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரோட்டரி சர்வதேச மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் ஒவ்வொரு இயக்குநரும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றுகிறார்கள். இந்தியாவிலிருந்து இரண்டு இயக்குனர்கள் இந்த குழுவில் இடம் பெறுவார்கள். இக்குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மண்டலம் அல்லது பிராந்தியத்தில் உள்ள கிளப்புகளை மட்டுமல்லாமல் முழு ரோட்டரி உலகத்தையே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

அந்த வகையில், நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் ரோட்டரி முன்னாள் ஆளுநருமான MMM  என்று எல்லோராலும் அழைக்கப்படும்  ம. முருகானந்தம் (2025-27) பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் பிரதிநிதியாக அவர் 17 உறுப்பினர்களைக் கொண்ட மிகவும் மதிப்புமிக்க ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் குழுவில் இடம்பெறும் இவர் திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் நபர் ஆவார். “SAY YES TO ROTARY” என்ற பயணத்தில் ரோட்டரியின் மனிதநேய சேவைகளை பல கோடி கணக்கான மக்களுக்கு சரியாக எடுத்துச் சென்று அவர்கள் அனைவரும் நன்மை அடைய வேண்டும் என்ற இலக்கோடு துவங்கியுள்ளார்.

யார் இந்த MMM முருகானந்தம்:

முருகானந்தம் Excel குழுமத்தின் நிறுவனர் ஆவார். பட்டயப் பொறியாளரான இவர் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக, ஒப்பற்ற சமூக ஆர்வலராக, சிறந்த கல்வியாளராக பல பரிமாணங்களில் தன்னைத்தானே செதுக்கி பலருக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார். 2006ல் தனது 31வது வயதில் EXCEL MARITIME & LOGISTICS கம்பெனியை துவங்கி, தொடர்ந்து EXCEL INFRA, EXCEL ENERGY, BALAJI ENGINEERING, MD IMPEX, EXCEL TRAVELS, BEATS JOBS, ZEAL TOURS AND EVENTS, EXCEL  AGRO, EXCEL HEALTHCARE ல் தடம் பதித்து இன்று Excel குழுமமாக வெற்றிநடை போட்டு இயங்கி வருகின்றது.

4 bismi svs

தனது 16 வது வயதில் ரோட்டரி பயணத்தை ஒரு ரோட்டராக்டராக தொடங்கி பின்பு திருச்சிராப்பள்ளி BHEL சிட்டி சங்கத்தை தோற்றுவித்து அதன் பட்டயத்தலைவராக பொறுப்பேற்றார். மிகவும் இளம் வயதிலேயே 2016-17 ல் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுநராக பொறுப்பேற்றார். ரோட்டரி அறக்கட்டளையின் 100வது ஆண்டினை கொண்டாடும் விதமாக தனது ஆளுநர் பொறுப்பின்போது 8 கின்னஸ் உலக சாதனைகளை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி கின்னஸ் கவர்னர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய ஆளுநர் பொறுப்பின்போது 99 ரோட்டராக்ட், 250 இன்டராக்ட் மற்றும் 100 ரோட்டரி கம்யூனிட்டி காப்ஸ் சங்கங்களை துவக்கி, இளைஞர் சேவையில் உலகளவில் முதலிடம் வகித்தார். மேலும் உறுப்பினர் சேர்க்கை, பப்ளிக் இமேஜ் மேம்படுத்தல், அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியது ஆகிய பிரிவுகளிலும் விருதுகளைப் பெற்றார்.

தான் ஒரு ரொட்டேரியன் ஆவதற்கு  முன்பே ரோட்டரிஅறக்கட்டளைக்கு நிதியளித்த பெருங்கோடையாளராவார். 4 லட்சம் அமெரிக்கடாலர்களுக்கு மேல் வழங்கி மாவட்டம் 3000 த்தின் முதல் ARCH KLUMPH SOCIETY MEMBER என்ற பெருமையைப் பெற்றவர். அவரது ரோட்டரி அறக்கட்டளை பங்களிப்புகள் மூலம், Global Grants மற்றும் Term Gifts மூலம் குறிப்பிடத்தக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கோவிட் லாக்டவுனின் போது திருச்சி அரசு மருத்துவ மனையின் உள்கட்டமைப்புமேம்படுத்தல், மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான ICU வார்டு மேம்படுத்தல் மற்றும் பால் வங்கி உபகரணங்கள் வழங்குதல் போன்றவை நிறைவேற்றப்பட்டது.

இவருடைய ஒப்பற்ற தலைமைத்துவத்தை போற்றும் வகையில் ரோட்டரியின் VOCATIONAL LEADERSHIP AWARD மற்றும் ரோட்டரி அறக்கட்டளையின் CITATION FOR MERITORIOUS SERVICE இவருக்கு வழங்கப்பட்டது.  தென்னிந்தியாவில் மிகவும் சிலருக்கே கொடுக்கப்பட்டுள்ள ரோட்டரியின் மிக உயரிய விருதான “Service Above Self ” Award 2018-19 ல் இவருக்கு வழங்கிட கௌரவிக்கப்பட்டது.  மாவட்டம் 3000 த்தின், 2023 ம் ஆண்டு மாநாட்டின் போது இவருக்கு Distinguished Service Award முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீவெங்கையா நாயுடு அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.

முருகானந்தம் தனது சொந்த நிறுவனமான Excel குழுமத்தின் சமூக பொறுப்பின் கீழ், Excel அறக்கட்டளையை துவங்கி அதன்மூலம் கல்குவாரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி, இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளின் நலனுக்காக பல அறிய நலத்திட்டஉதவிகளை செய்து வருகிறார். திருச்சி Spastic Children’s Society யின் நிர்வாகக்குழுவில் முக்கியபொறுப்பு வகிக்கின்றார். விளையாட்டு துறையினை ஊக்குவிக்கும் விதமாக ஏழை எளிய மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் பல வளர்ச்சி திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.

தனது தாயாரின் நினைவாக பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க தையல் பயிற்சி மையத்தை அமைத்து கொடுத்துள்ளார். வருடா வருடம் பல்வேறு துறையில் சிறப்பாக செயல்பட்டு சமூகத்தில் ஒரு முன்னுதாரணமாக திகழ்வோருக்கு EXCEL விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.  கொரோனாகாலத்தில் வேலையின்றி வறுமையின்பிடியில் சிக்கித்தவித்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியும், பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியும் பேருதவி செய்தார். MMM ன்ஒப்பற்ற மனிதநேய சேவையைப் பாராட்டி சமீபத்தில் திருச்சி நேஷனல் கல்லூரி சர்வதேச விளையாட்டு மாநாட்டினை ஏற்று நடத்தியபோது “வாழ்நாள் சாதனையாளர்” விருதினை இவருக்கு வழங்கிட கௌரவித்துள்ளது.

ஒரு ரோட்டராக்ட்டராக தனது ரோட்டரி பயணத்தை துவங்கி சங்கம், மாவட்டம், மண்டலம் ஆகிய நிலைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறி இன்று பன்னாட்டு அளவில் ரோட்டரியில் இயக்குனராக தலைமை பொறுப்பு ஏற்று அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மாறு..!! மாற்று..!! என்ற தாரகமந்திரத்திற்கு சொந்தக்காரர், சர்வதேச ரோட்டரி இயக்குனர் பொறுப்பு மூலம்முருகானந்தம்  ரோட்டரியின் மூலம் பல நலத்திட்டங்களை மக்களுக்கு பெரியளவில் எடுத்துச் செல்ல முனைப்புடன் இருக்கிறார்.

வீடியோ லிங்: 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.