181வது ஆண்டு விழா கொண்டாடிய திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 181வது ஆண்டு விழா மார்ச் 21 2025 அன்று கோலாகலமாக நடந்தேறியது. கல்லூரியின் பாதுகாவலர் புனித யோசேப்பின் திருவருட்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு தொடங்கியது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் இறைவணக்கம் பாடப்பட்டது. கல்லூரியின் துணைமுதல்வர் அருள்முனைவர் அருளானந்தம் சே.ச. விருந்தினர்களையும் வந்திருந்தவர்களையும் வரவேற்றார்.
கல்லூரியின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கில் சே.ச. அவர்களும், கல்லூரியின் செயலர் அருள்முனைவர் கே. அமல்சே.ச. அவர்களும், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ்சே.ச. அவர்களும், கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தனர்.

2024- 25 கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையினை கல்லூரி முதல்வர் அருள்முனைவர். மரியதாஸ்சே.ச. அவர்கள் ஒலிஒளிகாட்சி டிவில் சமர்ப்பித்தார். கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு சிறப்பு செய்து கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் கல்லூரியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. வருகை பதிவில் 100% பெற்ற பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் பணியாளர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கல்லூரி தினவிழாவின் சிறப்பு விருந்தினர் மேதகு தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர்முனைவர் த. சகாயராஜ் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தை நோக்கிய சிந்தனையுடைய மாணவ மாணவியராய் வளனார் கல்லூரி மாணவர்கள் திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவு தலைவர் திரு பிரவீன் சேகர் பேசுகையில், தூயவளனார் கல்லூரி மாணவ மாணவியர் திறமைகளை வளர்த்துக் கொண்டு நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தங்கள் திறன்மூலம் காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் சென்னை லயோலா கல்லூரியின் உடைய பேராசிரியை முனைவர் ஜூடித்விஜயா அவர்களுக்கு ஆராய்ச்சிக்கான சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் பட்டியலிடப்பட்ட உலக அளவிலான 2 சதவிகித முன்னணி அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைவாரியான சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்குப தக்கங்களும் பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கி பாராட்டப்பெற்றனர். நிகழ்ச்சி நிறைவில் நாட்டுபண்பாடப்பட்டு கல்லூரி தினவிழா இனிதே நிறைவு பெற்றது. விழாவில் 4000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.