2024 எம்.பி தேர்தல் யார்… யார்…. எந்த தொகுதியில்…?
2024 எம்.பி தேர்தல் யார்… யார்…. எந்த தொகுதியில்…?
- உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினராக உள்ள தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளராகத் தமிழ் நாட்டில் உள்ள இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
- தற்போது சிதம்பரம் மக்களவை உறுப்பினராக உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொகுதி மாறி, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
- மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரைவைகோ திருச்சி அல்லது விருதுநகரில் போட்டியிடுகிறார். மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரம் தனித்தொகுதியில் போட்டியிடுகின்றார்.
- சென்னை தென்சென்னை மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் நடிகர் கமலஹாசன் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
- திமுக கூட்டணியில் வெற்றிப்பெற்று பெரம்பலூர் மக்களவை உறுப்பினராக உள்ள பாரிவேந்தர், பாஜக கூட்டணியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
- சிவகங்கை தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று திமுக மாவட்ட கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
- மேலும், சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்திக் போட்டியிடக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
- சிவகங்கை தொகுதியில் கரு.பழனியப்பன் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினர் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தொகுதி மாறி சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
– ஆதவன்