2024 எம்.பி. தேர்தல்… கட்சிகளின் பலே பலே திட்டங்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2024 எம்.பி. தேர்தல்… கட்சிகளின் ரகசிய திட்டங்கள் !

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் இடங்கள் முடிவு செய்யப்படும். என்றாலும் தேர்தல் ஜுரம் இப்போது எல்லாக் கட்சியிலும் உள்ளன. சில கட்சிகளின் எண்ணங்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

காங்கிரஸ்

சோனியா - மல்லிகார்ஜுன் கார்கே
சோனியா – மல்லிகார்ஜுன் கார்கே

கடந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்டுக் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான சீட்டு 5ஆகாகக் குறைக்கப்படும் என்ற ஒரு பத்திரிக்கைச் செய்தியைப் பார்த்து அரண்டு போய்விட்ட காங்கிரஸ் கட்சி, அண்மையில் சென்னை வந்த தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து, “நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளைத் திமுகவிடம் கேட்டுப்பாருங்கள். இல்லையென்றால் பழைய 10 குறையவேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி காமராஜர் பாணியில் ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று தலையாட்டியுள்ளார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

மதிமுக

வைகோ - மு.க. ஸ்டாலின்
வைகோ – மு.க. ஸ்டாலின்

கடந்த தேர்தலில் ஈரோடு ஒரே மக்களவைத் தொகுதியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது. தற்போது குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்று மதிமுக முடிவு செய்துள்ளது. (1.விருதுநகர் (அ) திருச்சி, 2.காஞ்சிபுரம்) திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்று கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைவைகோ திருச்சியில் தெரிவித்துள்ளார். மேலும், கட்சித் தொண்டர்களின் விருப்பப்படி மதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் என்று கூறியுள்ளார்.

மதுரை மதிமுக மாநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சூளுரைத்த துரைவைகோ, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கூறினார். மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மருத்துவர் ரோஹையா துரைவைகோ திருச்சியில் போட்டியிட வேண்டும் என்று அறிவித்தபோது, திருச்சி மேடையில் புன்னகையுடன் துரைவைகோ அமர்ந்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருமா
திருமா

கடந்த தேர்தலில் விசிக விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றன. விழுப்புரத்தில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற்றார். சிதம்பரம் தொகுதியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு விசிக 3 தொகுதிகளில் போட்டியிடத் திமுகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கூடுதலாகக் கேட்டிருக்கும் ஒரு தொகுதி பொதுத்தொகுதியாகும். விசிகவின் பொதுத்தொகுதியில் இஸ்லாமியர் ஒருவரை நிறுத்த முடிவு செய்துள்ளது என்ற தகவல் உள்ளது. பொதுத்தொகுதியில் இல்லாமல் தனித்தொகுதி கிடைத்தால், தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தை விசிக அங்கீகரிக்கும் விதத்தில் அச் சமூகம் சார்ந்த சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தற்போது ஓய்வு பெற்றுள்ள பெண் பேராசிரியர் ஒருவர் நிறுத்தப்படலாம் என்ற கூடுதல் தகவலும் உள்ளது.

இந்திய ஜனநாயகக் கட்சி

பாரிவேந்தர் - மோடி
பாரிவேந்தர் – மோடி

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தர் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் வெற்றிபெற்றார். 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு, திமுக கூட்டணியிலிருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் என இரு தொகுதிகளில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.  பெரும்பாலும் இந்த முறை கள்ளக்குறிச்சி தான் வேந்தரின் தேர்வாக இருக்கும், அதே நேரத்தில் அதிமுகவிடமும் பேசி வருகிறார். அதிமுக பிஜேபி இல்லாமல் போட்டியிட்டால் அதிமுக பக்கமே நிற்கலாம் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது…

தேமுதிக

சுதிஷ் - பிரேமலதா விஜயகாந்த்
சுதிஷ் – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் தலைவர் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, பொருளாளர் பொறுப்பில் உள்ள அவர் மனைவி பிரேமலதா அவர்கள்தான் கட்சியைத் தற்போது நடத்திவருகிறார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக டெபாசிட்டை இழந்து பெரும் தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வியூகம் மாறியிருக்கிறது. பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருப்பது என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி, விருதுநகர் என 2 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பாஜக தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. (எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை உறுப்பினராவார்)

திமுக

முதல்வர். மு.க.ஸ்டாலின்
முதல்வர். மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன. இடதுசாரிகள் போட்டியிட்ட 2 இடங்களுக்குக் குறையாமல் இருந்தால்போதும் என்று இருக்கிறார்கள். மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம் (அ) வேலூரில் போட்டியிட விரும்புகிறது. முஸ்லீம் லீக் போட்டியிட்ட ஒரு கிடைத்தால் போதும் என்றிருக்கின்றது. தற்போது திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வாரிசுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற தகவல் உள்ளது. ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையின் வழக்குகளில் உள்ளவர்களுக்கு இந்த முறை திமுகவில் சீட் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. கடந்தமுறை தேனியில் திமுகவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த தங்கத்தமிழ்ச்செல்வன் 2024ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் 2024ஆம் ஆண்டு மாநிலங்களவையில் உறுப்பினராக்கினால் போதும் என்ற மனநிலையோடு இருக்கிறாராம். காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வரும் திருச்சி, கரூர், சிவகங்கை, விருதுநகர், ஆரணி, கன்னியாகுமரி தொகுதிகளில் ஒரு மாற்றமாக 2024ஆம் ஆண்டு தேர்தலில் திமுக போட்டியிடவுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

DDV_தினகரன்
DDV_தினகரன்

டிடிவி தினகரன் தலைமையில் இயங்கி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாஜக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகின்றது. இக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 4ஆம் நாள் திருச்சியில் நடைபெறவுள்ளது. முறைப்படி பாஜக கூட்டணியில் இணையும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கட்சிக்குப் பாஜக கூட்டணியில் தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகள் ஒதுக்கப்படலாம். அமமுகவோடு இணைந்து செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குத் தேனி மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற தகவல்களும் உள்ளன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.