வீட்டில் விபச்சாரம் – கஸ்டமர் ஏழு பேர் கைது ! நடந்தது என்ன ?

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

விபச்சார வழக்கில் வாடிக்கையாளர்கள் ஏழு பேர் கைது ! – பின்னணி என்ன?

”வீடு எடுத்து விபச்சாரம் வாடிக்கையாளர்கள் கைது” என்று தினசரி ஒன்றில் வெளியான தலைப்பே வித்தியாசமாகத்தான் தெரிந்தது. பொதுவில் விபச்சார வழக்குகள் தொடர்பான செய்திகளில், பெண்களை வைத்து விபச்சார தொழிலை நடத்தியதாகவோ, அதற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்கள் கைது என்பதாகவோகத்தான் இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களை காப்பகத்திற்கு அனுப்பிவைத்த தகவலும், அதிகபட்சம் குற்றசம்பவத்தில் தொடர்புடைய இடத்தின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு என்பதாக பொதுவில் அந்த செய்தி நிறைவடையும்.

2

”திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசன்நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட காவல் உதவி எண் (Help Line) 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள்  (27.10.2023) அதிரடி சோதனை மேற்கொண்டதில், பார்த்திபன் 32, த/பெ ராஜேந்திரன், நவல்பட்டு, திருச்சி என்பவர் அங்கு இரண்டு பெண்களை வைத்து கடந்த சில தினங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்களாக இருந்த 7 நபர்கள், ஆக மொத்தம் 8 நபர்களின் மீது சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண்: 301/2023 இன் படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, ரூ.70,000/- பணம் மற்றும் 4 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 12 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.” என போலீசார் தரப்பில் வழங்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3
சோமரசம் பேட்டை காவல்நிலையம்
சோமரசம் பேட்டை காவல்நிலையம்

மேலும், விபச்சாரத்திற்கு வீட்டை வாடகைக்கு அனுமதித்த வீட்டின் உரிமையாளர் ஜெயலெட்சுமி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, வீட்டை வாடகைக்கு எடுத்தவர்களுள் ஒருவரான தப்பி ஓடிய வினோத் என்பவரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண் 301/2023 U/S 3(2)(a), 4(1), 5(1)(a), 6(1)(a) Immoral Traffic (Prevention) Act-1956 ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெரிய ஆலம்பட்டி புதூரைச் சேர்ந்த தி. முனிஸ் (26) ; தில்லைநகரை சேர்ந்த வெ.ராஜா மணிகண்டன் (38); பொன்மலையைச் சேர்ந்த அ.பாபு (32); மணப்பாறை, மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஆ.பார்த்திபன் (34); தஞ்சாவூர் பேராவூரணியைச் சேர்ந்த மோ.சிவரெங்கன் (33); திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்த சி.ஐயப்பன் (26); கோவை பழனிகவுண்டன்புதூரைச் சேர்ந்த ப.ஜெய்கணேஷ் (26) ஆகிய வாடிக்கையாளர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டிருப்பதுதான், இவ்வழக்கின் ஹைலைட்.

4

”இதுபோன்ற சம்பவங்களில் நாங்கள் ரெய்டுக்கு செல்லும்போது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தப்பி ஓடிவிடுவார்கள். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் யாரும் தப்பிவிடாதவாறு உரிய ஏற்பாடுகளோடுதான் சென்றோம். அதன் காரணமாகத்தான் அனைவரையும் கைது செய்ய முடிந்தது.

7
எஸ்.பி. வருண் குமார்
எஸ்.பி. வருண் குமார்

மிக முக்கியமாக மாவட்ட எஸ்.பி. சாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலிருந்துதான், அவரது வழிகாட்டலில்தான் இந்த ரெய்டை நடத்தினோம். அவர்கள் இந்த வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக அவர்கள் எங்களிடம் சிக்கிவிட்டார்கள். எஸ்.பி. அறிவித்திருக்கும் பிரத்யேக எண்ணிற்கு பொதுமக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பும் விழிப்புணர்வுமே காரணம்.” என்கிறார், அதிரடி சோதனையை நடத்தி முடித்த ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா.

”பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வழங்கியுள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உரிய சட்ட நடைமுறைகளின்படி கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக உள்ள வினோத் மற்றும் வீட்டின் உரிமையாளர் ஜெயலட்சுமியை தேடிவருகிறோம்.” என்பதோடு முடித்துக்கொண்டார், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகம்மது ஜாபர். தற்போது நடைமுறையில் உள்ள, Immoral Traffic (Prevention) Act-1956 சட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு விபச்சாரத்தை ஒழித்துவிட முடியாது என்பது நீண்டகாலமாகவே, போலீசாரின் ஆதங்கமாக இருந்து வருகிறது.

இதற்கு ஆதாரமாக, எந்தவொரு பாலியல் தொழிலாளியும், வயது வந்தவராக இருந்து, தனது சொந்த சம்மதத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அத்தகைய நபர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது; கைது செய்யக்கூடாது; சட்ட நடவடிக்கைகளை தொடரக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதைவிடக் கொடுமை, விபச்சார விடுதிகளில் சோதனை செய்யும் போது, அங்கிருக்கும் ஆண் வாடிக்கையாளர்களை கைது செய்ய கூடாது என்றும் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பாதகமான தீர்ப்புகள் பல, நாட்டின் வெவ்வேறு நீதிமன்றங்களில் வெளியாகியிருப்பதையும் வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார்கள்.

கைது
கைது

குறிப்பாக, தமிழகத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபச்சார விடுதியில் இருந்து கைது செய்யப்பட்ட உதயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு; பெங்களூருவைச் சேர்ந்த பாபு என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு ஆகியவற்றில் சம்பவ இடத்தில் இருந்தார் என்பதை மட்டுமே வைத்து ”வாடிக்கையாளர்கள்” மீது வழக்கு பதிவு செய்தது தவறு என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன.

ஆறுதலான தகவல். மேற்கு வங்கம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் ஹால்டியா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு (2019-ஆம் ஆண்டில்) ஒன்றில், “விபச்சாரத்தை மேற்கொள்ள ஒரு நபரை தூண்டுவது’ என்ற சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ”வாடிக்கையாளர்” கள் மூவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி அனில்குமார் பிரசாத் அவர்கள். அரிதிலும் அரிதாக விபச்சார வழக்கில், வாடிக்கையாளர்கள் தண்டிக்கப்பட்டது நாட்டிலேயே இதுவே முதல்முறையாக இருக்ககூடும்.

”ஒரு இடத்தில் கைது செய்தால், அடுத்த ஒரு வாரத்தில் அடுத்து ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து விபச்சாரத் தொழிலை தொடர்கிறார்கள். வாடிக்கையாளர்களை வெறுமனே, சாட்சியாக பயன்படுத்துவதை தாண்டி வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலைதான் நீடிக்கிறது. விபச்சாரம் நடைபெறும் இடங்களுக்குச் சென்றால், நாமும் கைது செய்யப்படுவோம்; வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கே அவமானமாகிவிடும் என்ற அச்சம் வாடிக்கையாளனாக வந்து செல்வனுக்கு ஏற்படும் வகையிலான சட்ட நடைமுறைகள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.” என்கிறார்கள் காக்கிகள் வட்டாரத்தில்.

– ஆதிரன்

Leave A Reply

Your email address will not be published.