நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை !
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா கோவை பேரூர் அருந்ததியர் மடத்தில் அக்-02 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் துணைத் தலைவர் ரவிக்குமார் வரவேற்றார்.
தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினரும், பேரூர் அருந்ததியர் மடத்தின் தலைவருமான எஸ். செல்வகுமார் தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து புத்தகங்களை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கும், வேலுநாச்சியார் போர்ப்படை தளபதி வீர மங்கை குயிலின் 245-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, முன்னாள் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே எஸ் கணேசன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தொண்டாமுத்தூர் தியாகு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
தமிழக அரசு மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்டத் துணை அமைப்பாளர் சீராபாளையம் செந்தில், திமுக நிர்வாகிகள் மகேந்திரன், சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் பி ஆர் வேலு
ச்சாமி, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் தென்னை சிவா, லிங்கேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி கோவை குமார் , கோவை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சங்கத் தலைவர் சிவக்குமார், செயலாளர் கபீர், சந்திரன், முன்னாள் தலைவர் சுந்தரம், துணை செயலாளர் திருமலைசாமி, மேகநாதன், சந்திரன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் சங்க நிர்வாக ரவிக்குமார் நன்றி கூறினார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.