‘2K லவ்ஸ்டோரி’ வெற்றிக் கொண்டாட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

City light pictures தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம்   ‘2K லவ்ஸ்டோரி’.

கடந்த  14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

'2K லவ்ஸ்டோரி' இந்நிலையில் படக்குழுவினர்  பத்திரிகை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியை நேற்று ( பிப்ரவரி 17) சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் கொண்டாடினர்.

இந்நிகழ்வினில்…

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன்

” எங்கள் முதல்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு நீங்கள் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. படம் மிக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன்”.

இயக்குநர் சுசீந்திரன்

“நிறைய பத்திரிகை நண்பர்கள்,  இந்தப்படம் பார்த்து, சுசீந்திரன் கம்பேக் எனப் பாராட்டினார்கள். அனைவருக்கும் எனது நன்றி.  இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், தந்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயன் சார், இந்தத் திரைப்படத்தை 200 தியேட்டர்களுக்கு மேல் கொண்டு சேர்த்தார், அவருக்கு என் நன்றி.

இயக்குநர் சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

என்னுடைய  இசையமைப்பாளர் இமான் இசைக்கும் ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கும்  ஒரு உதவி இயக்குநர் போல என்னுடன் உழைத்த எடிட்டர் தியாகு, போஸ்டர் வடிவமைப்பாளர் கார்த்திக், இப்படம் நடக்கக் காரணமாக இருந்த திருப்பூர் தமிழ் மணி அண்ணா ஆகியோருக்கு நன்றி.  புதுமுக நாயகன் ஜெகவீர் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார். என் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி”.

நடிகர் ஜெகவீர்

“இந்த நல்ல திரைப்படத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. என்னைப் புதுமுகமாக இருந்தாலும் என்னை வரவேற்று வாழ்த்திய அன்பு ரசிகர்களுக்கு நன்றி. என் குரு, என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர்  சுசீந்திரன் அண்ணனுக்கும் என் தயாரிப்பாளர் நண்பர்  விக்னேஷ் சுப்ரமணியனுக்கும் நன்றி.

எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருந்த, தனஞ்செயன் சார் அற்புதமான இசையைத் தந்த தமன் சார்,படம் பார்த்து ஊக்கம் தந்து பாராட்டிய இயக்குநர் பிரபு சாலமன் சார் ஆகியோருக்கு நன்றி. சுமார் மூஞ்சி குமாரான என்னையும், எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய கேமரா மேன் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு, உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்காக உழைத்த அனைவருக்கும், படம் பார்த்துத் தொடர்ந்து பாராட்டி வரும் அனைவருக்கு நன்றி”

நடிகை லத்திகா

“இப்படத்திற்கு நீங்கள் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்தப்படத்தில் பவித்ரா கேரக்டருக்கு தந்து வரும் பாராட்டுக்களுக்கு நன்றி.  முதல் படத்தில் அழகான கேரக்டர் மூலம், அறிமுகப்படுத்திய சுசி சாருக்கு நன்றி. இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய  ஒளிப்பதிவாளர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கும் நன்றி.எங்கள் அனைவருக்கும் இதே ஆதரவைத் தொடர்ந்து தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நடிகை ஹரிதா

“இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணமான பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இங்கே குண்டாக இருப்பது பற்றியும், ஃபிட்டாக இருப்பது பற்றியும், ஒரு கருத்து இருக்கிறது. என் உடலை வைத்து சினிமாவில் நிறைய கமெண்ட்கள் கேட்டிருக்கிறேன். அது மாதிரியான நேரத்தில் என்னை மதித்து, எனக்கு சுதந்திரம் தந்து, இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம். என் தயாரிப்பாளர்  விக்னேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் படம் பார்த்து  வாழ்த்திய அனைவருக்கும்  நன்றி”.

 

—  மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.