சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி !
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து 4 பேர் உடல் சிதறி பலி – விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான குருஸ்டார் என்ற பட்டாசு ஆலை டி.ஆர்.ஓ. உரிமம் பெற்று பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது,
இந்த ஆலையில் பணியாற்றி வந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் வயது 41, நடுச்சூரங்குடியை மாரிச்சாமி வயது 40, மடத்துப்பட்டி அருகில் உள்ள ஆர். சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் வயது 43 மற்றும் மோகன் வயது 50 ஆகியோர் இன்று காலை மூலப்பொருள் கலக்குவதற்காக தொழிலாளர்கள் 4 பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது மூலப்பொருள் உராய்வு காரணமாக 9 மணி அளவில் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று அறைகள் தரைமட்டம் ஆனது நிலையில் , இந்த விபத்தில் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகி உள்ளனர்.
மேலும் விரைந்து வந்த தீயணைப்பு துறை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் வேறு யாரேனும் இடிபாடுக்குள் சிக்கி உள்ளனரா என்று தேடி வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆலையில் உள்ள அறைகளை குத்தகைக்கு விட்டது தெரியவந்தது.
சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் விபத்து உயிரிழப்பு காரணமாக மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் பல பட்டாசு ஆலைகள் இன்னும் திறக்காமல் மூடப்பட்டதால் கடுமையான சிக்கல்களை பட்டாசு தொழில் சந்தித்து வரும் சூழ்நிலையால், தற்போது இந்த விபத்தால் இன்னும் மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் மிகுந்த கவலையுடனே இருக்கிறார்கள் என்பது உண்மையான நிதர்சனம்,