“நான் சந்தித்த தோல்விகள், எனக்கு வந்த அபாயங்களிலிருந்து மீண்டு வந்துள்ளேன்”–’45’ பட விழாவில் ஷிவராஜ் குமார் உருக்கம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எஸ்.பி.சுராஜ் புரொடக்சன்ஸ் பேனரில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும்  எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கருநாட சக்கரவர்த்தி டாக்டர் ஷிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, கன்னடத்தில் 140 படங்களுக்கு இசையமைத்த  அர்ஜுன் ஜான்யா இயக்குனராகவும் களமிறங்கி ஃபேண்டஸி ஆக்சன், த்ரில்லராக உருவாகியுள்ள கன்னடப்படம் ’45’.

இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாவதால் ’45’-தமிழ் பதிப்பின் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் ஏப்ரல் 16- ஆம் தேதி காலை  நடந்தது.

Sri Kumaran Mini HAll Trichy

இந்நிகழ்வினில் பேசியோர்….

இயக்குநர் அர்ஜுன் ஜன்யா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“சென்னைக்கு நான் ஃபேன் பாய். 25 வருடமாக இசையமைப்பாளராக வேலை பார்க்கிறேன்.சென்னை வந்தாலே எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் நினைப்பு தான். அவர்களின் தீவிர ரசிகன் நான். என் படம் தமிழில் வெளியாவது மகிழ்ச்சி. இந்தக்கதையை ரெடி செய்தவுடன் சிவாண்ணாவிடம் சொன்னேன். நீயே இந்தப் படத்தை பண்ணு என அவர் தான் உற்சாகப்படுத்தினார். இந்தப்படத்தைப் பொறுத்தவரை, ஷூட்டிங் கிற்கு முன், ஸ்டோரி போர்ட் மாதிரி, கார்டூனில், முழுதாக 2 1/2 மணி நேரம் ரெடி செய்து, அதை எடிட் செய்து, சிஜி செய்து, மியூசிக் போட்டு, டிடிஎஸ் செய்து காட்டினேன். சிவாண்ணா சந்தோசப்பட்டார்.

இயக்குநர் அர்ஜுன் ஜன்யா
இயக்குநர் அர்ஜுன் ஜன்யா

இதில் என்ன வசதி என்றால், படமெடுக்கும் போது வேஸ்ட்டாக ஒரு ஃப்ரேம் கூட எடுக்க தேவையில்லை. எல்லாமே தயாராக இருந்தது. எடிட்டிங்கிற்கு கூட வேலை இல்லை. இதை இந்திய சினிமாவில் முதல்முறையாக நான் செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. உபேந்திரா சார் மிக உற்சாகமாக நடித்துத் தந்தார். ராஜ் பி ஷெட்டி அருமையான ரோல் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. நான் இசையமைப்பாளர் தான். ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் இல்லை.  இப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும்”.

 டாக்டர் ஷிவராஜ்குமார்

“சென்னைக்கு எப்போது வந்தாலும் எனக்குள் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் . நான் பிறந்து, வளர்ந்து காலேஜ் படிச்சது வரை இங்கு தான். எனக்கு மலரும் நினைவுகள் இங்கு அதிகம் இருக்கிறது. நான் சென்னையில் இருந்த போது தான் எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் ஹீரோவாக என்னை நினைத்ததில்லை. ஹீரோ என்றால் கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் தான் என் ஃபேவரைட். நானும் சினிமாவுக்கு வந்தேன். நிறைய தோல்விகள் நிறைய வெற்றிகளைப் பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன்.

டாக்டர் ஷிவராஜ்குமார்
டாக்டர் ஷிவராஜ்குமார்

எனது குடும்பத்தில்  பல மரணங்கள், வீழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்கு தலையில் சர்ஜரி, கேன்சர் என அனைத்தையும் கடந்து வந்தேன். இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள். இப்ப இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் கதை சொன்னபோதே பிடித்திருந்தது. மிக அருமையாக இப்படத்தை இயக்கியுள்ளார் அர்ஜுன். கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது புதுமையான அனுபவமாக இருக்கும். ஒரு முழுமையான எண்டர்டெயினிங் படமாக இது இருக்கும். மீடியா நண்பர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் நன்றி”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரியல் ஸ்டார் உபேந்திரா

“இயக்குநர் அர்ஜுன் மிகப்பெரிய இசையமைப்பாளர். ஆனால் இயக்குனராக இப்படத்திற்காக மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவர் கதை சொன்ன போதே, அவ்வளவு பிடித்திருந்தது. நீங்கள் கண்டிப்பாக இதை இயக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினேன். தயாரிப்பாளர் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ராஜ் பி ஷெட்டி அருமையாக நடித்துள்ளார். டார்லிங் சிவாண்ணாவுடன் நானும் ஒரு கதாப்பாத்திரம் நடித்துள்ளேன்”.

தயாரிப்பாளர் எம். ரமேஷ் ரெட்டி

“இயக்குநர் அர்ஜுன் தான் இப்படத்தின் சூத்திரதாரி.  இந்தப்படத்திற்காக ஒரு வருடம் உழைத்தார். இது பான் இந்தியா படமில்லை. இது இந்தியப்படம். இந்தியாவில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். பெரிய பட்ஜெட்டில்,  மிகப்பெரிய உழைப்பைத் தந்து உருவாக்கியுள்ளோம். படம் அட்டகாசமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்”

வரும் ஆகஸ்ட் 15 -ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது ’45’.

ஷிவராஜ் குமார் உருக்கம்!
ஷிவராஜ் குமார் உருக்கம்!

Flats in Trichy for Sale

தொழில் நுட்பக்குழு

கதை, இசை, இயக்கம் : அர்ஜுன் ஜன்யா

தயாரிப்பாளர்கள்: ஸ்ரீமதி உமா ரமேஷ் ரெட்டி, எம் ரமேஷ் ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : SP Suraj Production

ஒளிப்பதிவு : சத்யா ஹெக்டே

எடிட்டர்: கே எம் பிரகாஷ்

சண்டைக்காட்சிகள்: டாக்டர் கே ரவிவர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃபரண்ட் டேனி, சேத்தன் டிசோசா

நடன இயக்குனர்: சின்னி பிரகாஷ், பி தனஞ்சய்

வசனம் : அனில் குமார்

தயாரிப்பு மேலாளர்: ரவிசங்கர்

தயாரிப்பு பொறுப்பு: சுரேஷ் சிவன்னா

கலை இயக்குனர்: மோகன் பண்டித்

ஸ்டில்ஸ் : ஜி பி சித்து

இணை இயக்குனர்: மஞ்சுநாதா ஜம்பே

மோஷன் கிராபிக்ஸ்: பிரஜ்வல் அர்ஸ்

ஒப்பனை: உமா மகேஷ்வர்

உடை வடிவமைப்பு : புட்டராஜூ

மக்கள் தொடர்பு : Aim சதீஷ் & சிவா

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.