கருப்பு மணல் கொண்ட உலகின் 5 அழகிய கடற்கரைகள்!
கடற்கரை என்றாலே பழுப்பு அல்லது வெள்ளை நிற மணல் கொண்ட பகுதியாக தான் நாம் அறிந்திருப்போம், ஆனால் கருப்பு நிற மணல்கள் கொண்ட கடற்கரையை நீங்கள் பார்த்ததுண்டா அல்லது கேள்வியாவது பட்டதுண்டா? அப்படி இல்லை என்றால் தற்போது நான் சொல்ல போகும் உலகில் கரு மணல் கொண்ட அழகிய கடற்கரைகள் குறித்து பாருங்கள். இந்த கருப்பு நிற மணல், எரிமலை தாதுக்கள் மற்றும் எரிமலை துண்டுகளால் உருவாகின்றன. அரிக்கப்பட்ட எரிமலைத் தாதுக்களில் இருந்து உருவாகும் இந்த கடற்கரை மணல்கள் வழக்கமான கடற்கரை மணல்களை விட கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. அப்படி நம் உலகில் இருக்கும் 5 கருப்பு மணல் கொண்ட அழகிய கடற்கரைகள்.
லோவினா கடற்கரை – பாலி!

பாலியின் மற்ற வெள்ளை லோவினா கடற்கரை மணல் கடற்கரைகளைப் போலல்லாமல், லோவினாவில் இருக்கும் கடற்கரை அதன் கருப்பு மணல் மற்றும் அமைதியான சூழ்நிலைக்குப் பிரபலமானவை.
குறிப்பாக இங்கு சூரிய உதயத்தின்போது துள்ளி விளையாடும் டால்பின்களைப் பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் இங்கு குவிக்கின்றனர்.
புனலு கடற்கரை – அமெரிக்கா!

ஹவாயின் பெரிய தீவில் அமைந்துள்ள புனலு கடற்கரை, ஒரு கண்கவர் கருப்பு மணல் கடற்கரையாகும். அங்கு செல்லும் பார்வையாளர்கள் கருப்பு மணலை மட்டுமல்லாது அழிந்து வரும் பச்சை கடல் ஆமைகளையும் ரசித்துவிட்டு வருகிறார்கள்.
ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை, ஐஸ்லாந்து!

ஐஸ்லாந்தின் விக் அருகே உள்ள ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை உலகின் மிகவும் பிரபலமான கருப்பு மணல் கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு இருக்கும் கருமணலைக் காண தினம்தோறும் பல சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
மிஹோ நோ மட்சுபாரா – ஜப்பான்!

மிஹோ நோ மட்சுபாரா கருப்பு மணல் கடற்கரையை தாண்டி இங்கு இருக்கும் ஃபுஜி மலையின் அற்புதமான காட்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்கிறது. அடர் மணல், நீல நிற நீர் மற்றும் பனி மூடிய சிகரத்திற்கு இடையிலான இந்தக் கடற்கரை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பிளேயா நெக்ரா – கோஸ்டா ரிகா!

கோஸ்டா ரிகாவில் உள்ள இந்த கருமணல் கொண்ட கடற்கரை அமைதியான சூழ்நிலைக்கு பெயர் பெற்றது. கரும் மணல் இந்த கடற்கரைக்கு ஒரு தனித்துவமான அழகை சேர்க்கிறது.
-மு. குபேரன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.