தீபாவளி நெரிசலில் தொலைந்து போன  1.5 பவுன் ! பத்திரமாக மீட்டு ஒப்படைத்த தம்பதி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி வாங்க வந்த இடத்தில் 1.5 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாயுடன் கைப்பையை தொலைத்த நிலையில், அவர் தொலைத்த பையை கண்டெடுத்த நபர் போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் மேலவடக் கூரை சேர்ந்த முத்துராஜ் மனைவி நிரோஷா தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி துணி மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அக் 27 அன்று மதுரை விளக்குத்துண் பகுதியில்உள்ள ஜவுளி கடைக்கு சென்றிருக்கிறார். விடுமுறை நாள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கான கடைசி நேர நெருக்கடியில் கடைவீதி மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அந்தக்கூட்டத்தில், 1.5 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கைப்பை ஒன்றை தொலைத்துவிட்டார் நிரோஷா. நண்பர்கள் உதவியுடன் பொருள் வாங்க வந்து சென்ற வழித்தடம் அனைத்திலும் தேடி களைத்து, கைப்பை திரும்பக் கிடைக்காத நிலையில் விரக்தியில் வீடு போய் சேர்ந்தார்.

இந்நிலையில், தீபாவளி துணி எடுப்பதற்காக கடைவீதிக்கு வந்திருந்த பாண்டியம்மாளின் கவனத்திற்கு வந்தது, அந்தக் கைப்பை. அதில் 1.5 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் இருப்பதை கண்டு அதிர்ந்தவர், கணவர் கோட்டைச்சாமியிடம் காண்பித்திருக்கிறார். சி.பி.ஐ.எம். கட்சியின் வடக்கு 1-ஆம் பகுதியின் செயலாளராக பதவி வகித்துவரும் கோட்டைச்சாமி, இந்த விசயத்தை உடனடியாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்திருக்கிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

கோட்டை சாமி சிபிஐஎம் 1ம் பகுதி செயலாளர்
கோட்டை சாமி சிபிஐஎம் 1ம் பகுதி செயலாளர்

அவரும் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறுதியாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், விளக்கத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில், விளக்குத்தூண் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஷ்குமார்  கைப்பையைத் தொலைத்த நிரோஷவை வரவழைத்து அவரது உடமைகளை ஒப்படைத்திருக்கிறார்.

நகைக்கும் பணத்துக்கும் ஆசைப்படாமல், பொருளை தொலைத்தவரிடம் முறையாக ஒப்படைத்துவிட வேண்டுமென்ற மனிதாபிமானத்தோடு நடந்துகொண்ட கோட்டைச்சாமி – பாண்டியம்மாள் தம்பதியினரின் செயல் மதுரையில் நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

 

– ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.