அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாநகர மரங்கள் அறிவோம்…

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

Trichy Tree Walk.. மாநகர மரங்கள் அறிவோம்..

அரியவகை மரங்கள் அறிவோம் என்கின்ற நிகழ்வு நடைபெற்றது திருச்சியில் முதல்முறையாக இந்நிகழ்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . 60 மாணவர்கள் பங்கேற்றனர். திருச்சியில் உள்ள அரியவகை மரங்கள் மாநிலத்திலேயே  உள்ள ஒரே ஒரு மரம், மாவட்டத்திலேயே  உள்ள ஒரே மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் காணும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

குறிப்பாக தமிழ்நாட்டிலேயே உள்ள ஒரே ஒரு மரம் பந்துக்காய் மரம் தொடங்கி ஐயப்பன் கோவில் வளாகத்தில் உள்ள செந்தூர மரம் உத்திராட்சை, காசி வில்வம், சரக்கொன்றை, பன்னீர் பூ மரம் உள்ளிட்ட அரிய வகை மரங்களை மாணவர்கள் கண்டு அதன் தனித்துவத்தை உணர்ந்து கொண்டனர்.

மாநகர மரங்கள் அறிவோம்..அதைத் தொடர்ந்து உக்கிர காளியம்மன் கோவிலுள்ள திருவோடு மரம், வன்னி மரம் அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிவ குண்டலம் மரம் ஏழிலைப் பாலை ராக்கெட்ரி என்று சொல்லப்படுகின்ற தனுக்கு மரம் உள்ளிட்ட மரங்கள், அதைத் தொடர்ந்து அகில இந்திய வானொலி குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூந்திக்காய் மரம், தொடர்ந்து வருமான வரித்துறை வளாகத்தில் உள்ள பலாசு மரம், மகிழ மரம், கோணப்புளி மரம் ஈட்டி மரம், சிசு மரம், குமிழ் தேக்கு, வேங்கை, செம்மரம் உள்ளிட்ட அரிய மரங்களை மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அதனைத் தொடர்ந்து ஓலையூர் அருகே உள்ள இச்சிக்காமலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரே ஒரு தேற்றான் கொட்டை மரம் அதனைத் தொடர்ந்து சாத்தனூர் பகுதியில் உள்ள தாளிப்பனை மரம் என சிறப்பாக பயணம் நடை பெற்றது. நிகழ்வை தோழர்கள் ஆய்வாளர் பாலா பாரதி, மரம் தாமஸ், தண்ணீர் அமைப்பு சார்பில் நடைபெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.