Sunday, November 22, 2026 | 8:37 PM IST

வீதிகளில் பேரணி… கல்லூரியில் ரங்கோலி! மழைநீர் சேகரிப்பில் திருச்சி மாநகராட்சி விழிப்புணர்வு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் நே. பொன்மணிஇ.ஆ.ப.,  அறிவுரைப்படி, உதவி ஆணையர்கள் தலமையில் நிர்வாக பொறியாளர், உதவிப்பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் முன்னிலையில் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 400 நபர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பேரணி 21.11.2026 அன்று மாம்பழச்சாலையிலிருந்து கணபதிநகர், வீரேஸ்வரம் அணுகுசாலை, புலிமண்டபம், அம்மாமண்டபம் சாலை, ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக மாநகராட்சி வார்டு குழு அலுவலகம் -1 வரை நடைபெற்றது. மண்டலம் -2  அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்து பேரணி பாலக்கரை ரவுண்டானாவில் முடிவுற்றது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மாநகராட்சி மண்டலம் 5 சார்பில், பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில்  மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும்  எடுத்துரைக்கும் வகையில், கோலங்கள் மூலம் மழைநீர் சேகரிப்பு முறைகள் மற்றும் அதன் பயன்களை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சிராப்பள்ளிமாநகராட்சி சார்பில் பிஷப் கீப்பர் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட ரங்கோலி கோலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, உதவி ஆணையர் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அதனைப் பார்வையிட்டு மாணவர்களிடம் விளக்கம் அளித்தார்கள். தமிழ்நாடு அரசின் மாநிலம் தழுவிய மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் திருச்சி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நிகழ்வுகள் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வடகிழக்குப் பருவமழை நீரைச் சேமிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு ரங்கோலி கோலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே மழைநீர் சேமிப்பின் அவசியத்தைக் கலை வடிவில் கொண்டு சேர்க்கின்றன. மாநகராட்சி பல்வேறு பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் கோலம் வழியாக மழைநீர் சேகரிப்பு முறைகளையும் அதன் பலன்களையும் விளக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துகின்றன என ஆணையர் நே. பொன்மணி, இ.ஆ.ப.,  தெரிவித்தார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.