அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குளித்தலையில் இளம் பெண்ணை  கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

குளித்தலையில் இளம் பெண்ணை  கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா வயது 40. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முசிறியில் வசித்து வருகின்றனர்.
பிரபா கடந்த 17 ஆம் தேதி வியாழக்கிழமை காலை முசிறியில் இருந்து பேருந்து மூலம் குளித்தலை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பேருந்து நிலையத்தில் புல்லட் பைக்கில் வழிமறித்த இளைஞர் அவரை பைக்கில் அழைத்துக் கொண்டு செல்ல, மற்றொரு இளைஞர் மற்றொரு பைக்கில் அவரை பின்தொடர அந்தப் பகுதி காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அங்கு அவரை மிரட்டி அவரிடம் இருந்த தாலி உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த குளித்தலை போலீசார் குளித்தலை முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் புல்லட்டின் நம்பரை வைத்து குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் கண்ட போலீசார், தொடர் விசார நடத்தினர். இளம் பெண்ணை மிரட்டி நகைகளை பறித்துச் சென்றவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதி பெருமாள்பட்டி கிராமம் கோம்பை புதூரை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் வயது 25.

அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் சரவணன் வயது 26. என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து அவர்கள் அடகு வைத்திருந்த 6 சவரன் நகையை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.