7 கிலோ கஞ்சா பறிமுதல்! கஞ்சா குற்றவாளிகள் கைது செய்த காவல்துறை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க காவல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயசீலன் அவர்களின் மேற்பார்வையில்,

(08.06.2025) ராம்ஜி நகர் மற்றும் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் துறையூர் மதுவிலக்கு அமாலக்க பிரிவு காவல் ஆய்வாளர் திரு.கதிரவன் மற்றும் தனிப்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் வேட்டையில் கஞ்சா வைத்திருந்த ராம்ஜிநகர், மலைப்பட்டி பகுதியை சேர்ந்த 1.பாக்கியலட்சுமி க.பெ சந்தோஷ், 2. நளினி க.பெ செந்தூரன் 3. கிருஷ்ணவேணி க.பெ கருப்பையா. 4. ரேவதி க.பெ லெட்சுமி காந்தன் மற்றும் ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலணியைச்சேர்ந்த 5. லதா க.பெ பால்ராஜ் ஆகியோரிடமிருந்து மொத்தம் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திருவரம்பூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் நிலைய ( 6 146/25 u/s 8 r/w 20(b) (II) (B)NDPS ACT -செய்யப்பட்டு மேற்படி எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sri Kumaran Mini HAll Trichy

கஞ்சா குற்றவாளிகள் கைது
கஞ்சா குற்றவாளிகள் கைது

Flats in Trichy for Sale

மேலும், கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் பதவியேற்றதிலிருந்து திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும். கஞ்சா மற்றும் போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகள் மீது மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கையில் இதுவரை மொத்தம் 125 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய அனைத்து எதிரிகளும் (180 எதிரிகள்) கைது செய்யப்பட்டும். அவர்களிடமிருந்து மொத்தம் 81.085 கிலோ கஞ்சா மற்றும் அதிக அளவிலான போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவ்வழக்குகளில் 22.04.2025-ம் தேதி அன்று திருவரம்பூர் உதவி காவல் கண்காணிப்பளார் திரு. பனவத் அரவிந்த் இ.கா.ப அவர்கள் தனிப்படையினருடன் காட்டூர் பகுதிகளில் போதைப்பொருட்கள் தொடர்பாக தேடுதல் வேட்டையில் Mehaqualone போதைபொருள், MDMA போதை மாத்திரைகள், கஞ்சா, மற்றும் OG கஞ்சா ஆகிய பொருட்களை கைப்பற்றி அவற்றை விற்பனை செய்த அனைத்து எதிரிகளையும் பிடித்து வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மேற்படி, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை வழக்குகளில் தொடர்புடைய 11 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 10 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இது போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மதிமயக்கும் பிற போதை வஸ்துக்கள். கஞ்சா விற்பனை, குட்கா விற்பனை, போலி மதுபான விற்பனை மற்றும் கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால் பொதுமக்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.