இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?

இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா? என்றே புருவம் உயர்த்த வைத்திருக்கிறார், பூல்பாண்டியன். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் பத்தாயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியை வழங்கியுள்ள இவர், கடந்த ஆறு வருடத்தில் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியை வழங்கியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் பெரும் செல்வந்தரோ, தொழிலதிபரோ அல்ல.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன், ஒரு மகன் இரு மகள்களோடு குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், மனைவியின் மறைவுக்கு பிறகு நாடோடி வாழ்க்கைக்கு மாறினார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடம் யாசகம் பெற்று, அதன் வழியே கிடைக்கும் வருவாயை சேமித்துதான் அவ்வப்போது முதல் அமைச்சர் நிவாரண நிதியாக வழங்கி வந்திருக்கிறார் என்பதுதான் நெகிழ்வில் ஆழ்த்தியிருக்கிறது.

விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற சமயத்தில் பெங்களூரூவில் புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோதிலும், அங்கிருந்த தமிழர்களிடம் யாசகம் பெற்று கிடைத்த வருவாயை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருக்கிறார், பூல்பாண்டியன்.

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.