அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீரங்கிமேடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (23), த.பெ. ஆண்டிச்சாமி என்பவர் விலா ஊரணிப்பட்டி பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (எ) ஜெயராஜ் 35/20, த/பெ. பெரியய்யா, என்பவரது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், இது குறித்து சொக்கலிங்கம் தனது மனைவியிடம் கேட்ட போது, கோபித்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம் கடந்த 16.03.2020 அன்று பீரங்கிமேடு பகுதியில் உள்ள பழனிச்சாமி (23), த.பெ. ஆண்டிச்சாமி என்பவரது வீட்டிற்கு சென்று அவரை அருவாளால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிசிக்சை பலனின்றி இறந்து விட்டார்.

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

இறந்து போன பழனிச்சாமியின் அப்பா ஆண்டிச்சாமி (57) என்பவர் கொடுத்த புகாருக்கு துவரங்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.48/20 u/s 307 IPC @ 302 IPC ன் படி அன்றைய தினமே வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (III -ADJ) நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆனந்தன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (19.06.2026) திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் அவர்கள் எதிரி சொக்கலிங்கம் (எ) ஜெயராஜ் 35/20, த/பெ. பெரியய்யா, கம்புலியாம்பட்டி, கோசுக்குறிச்சி, நத்தம், திண்டுக்கல் மாவட்டம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 5,000 அபராதம் வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த துவரங்குறிச்சி காவல் நிலைய நீதிமன்ற காவலர்  முத்து என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப பாராட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.