அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளுமை மறைவு …….

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உழவுச் சமூகத்தை ஒரு பிரிவினர் தலித் என்று அடையாளப்படுத்தும் போது பொது வெளியில் துணிச்சலோடு தேவேந்திரர்கள் தலித்துகள் அல்ல என மறுத்தவர் ஐயா பூமணி.

தலித் எழுத்து, தலித் எழுத்தாளர் என்ற கருத்தியலை யெல்லாம் மறுத்தவர் அவர்..

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

எழுத்து எழுத்து தான் அதில் தலித் எழுத்து தலித் அல்லாத எழுத்து என்ற வகைப்பாடு சரியல்ல என மறுத்தவர் …

இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள ஆண்டிப் பட்டி என்ற சிற்றூரில் மே 12 / 1947 இல் பூலித்துரை தேனம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி …

யாவரும் கேளீர்

இவரது மூத்த அக்காள் மகன் தான் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஐயா சோ. தருமர்..

தமிழ் இலக்கியப் பரப்பில் மாமனும் மருமகனும் சாகித்ய அகாடமி விருது பெற்றது ஆபூர்வம் தான்.

எல்லாக் காலத்திலும் கரிசல் வட்டாரத்தில் இலக்கியப் படைப்புகள் எழுந்தபடியே தான் இருக்கிறது.

மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களது ஊக்குவிப்பில் வளர்ந்தவர் பூமணி.

1971-இல் “அறுப்பு ” எனும்  முதல் நாவலை தாமரை இதழ் வெளியிட்டது..

பிறகு,வரப்பு , வெட்கை, எலேய், கசிவு, அறுவடை கிழிசல் எனப் பல கதைகள், நாவல்களைப் படைத்தார்..

2014 இல் அவர் எழுதிய அஞ்ஞாடி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்..

நூலின் முகப்பில் ….

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

மழைக்கஞ்சியைக் கதையாக ஊட்டிய என் அம்மாவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அஞ்ஞாடி என்றால் அம்மா என்று பொருளாம்..

அம்மா பள்ளர், ஆயா பள்ளர்,ஆஞ்ஞா பள்ளர் என்ற பல பிரிவினர் எம் சமூகத்தில் உண்டு…

தாய்வழிச் சமூகத்தின் நீட்சியை சொல்லும் சமூகம் குடும்ப மார் சமூகம்.

கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றியவர் எழுத்துலகத்தில் ஆர்ப்பரித்ததோடு தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார் அது உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெற்றது…

வெக்கை நாவல் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

அசுரன் திரைப்படம் இவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்..

தான் சார்ந்த வட்டாரத்தின் வாழ்வியலை அடுத்த சந்ததிகளுக்கு கடத்தி விட்டுப் போகிறவர்கள் எழுத்தாளர்கள் ….

ஆகவே அரசும் சமூகமும் மறைந்த எழுத்தாளர் பூமணியைக் கொண்டாட மறக்கக் கூடாது…

மறைந்த எழுத்தாளர் கிரா வுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் எழுப்பியது போல பூமணிக்கும் நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும் என யாழி வாசகர் தளம் தமிழக அரசுக்குக் கனிவோடு கோரிக்கை வைக்கிறது…

ஐயா பூமணி அவர்களின் எழுத்தை வாசிப்பது தான் நாம் அவருக்குச் செலுத்தும் நன்றி…

கனத்த இதயத் துடன் ….

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.