அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அது பெருங்கனவு – அந்த கனவு நிறைவேற என்ன விலையையும் கொடுக்க….

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் பதவிக்கு மகேஸ்வரி அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் டிஜிபி (ம) டிஜிபி அந்தஸ்து கொண்ட இந்த பதவியை டி -கிரேட் செய்து ஐ.ஜி. அந்தஸ்து நிலை மகேஸ்வரியை (பொறுப்பு) நியமனம் செய்திருக்கிறார்கள்.

பொறுப்பு நியமனம்தான் என்று சொல்லப்பட்டாலும், முழுமையாகவே இந்தப்பணியில் ஐ.ஜி. மகேஸ்வரி செயல்படுவார் என்கிறது காவல்துறை தரப்பு.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அரசுகள் நினைத்தால் டி- கிரேடு பதவிக்கான இடம், அப்- கிரேடு ஆவதும், அப் -கிரேடு பதவிக்கான இடம், டி- கிரேடு ஆவதும் இயல்பு. அந்த இயல்பு என்பது பொதுப்பார்வைக்கு மட்டும்தான்.

தீர்க்கப்பார்வையாக கவனித்தால், ‘அது’ அப்படி அல்ல. ஆட்சியாளர்களின் கோபம், அதிருப்தி, தனிப்பட்ட விருப்பம் சார்ந்த ஒன்றாகவே கவனத்தில் கொள்ளப்படும்.

யாவரும் கேளீர்

முன்னுதாரணம் நிறைய. சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கையானது, கூடுதல் டிஜிபி அந்தஸ்தில்தான் 2000-ஆம் ஆண்டு வரை இருந்தது. அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்புக்கு வந்ததும் ஐ.ஜி., அந்தஸ்தில் இருந்த திரு. முத்துக்கருப்பன் அவர்களை, டி-கிரேடு முறையில் போலீஸ் கமிஷனராக்கினார்.

சீனியர் ‘விருமாண்டி’ ஆர்.நட்ராஜ், டிஜிபி பதவிக்காக பணி – பதவி மூப்பில் காத்துக் கிடக்க, ஜூனியர் லத்திகாசரண் டிஜிபி ஆக்கப்பட்டார். முதலமைச்சர் கலைஞர்.

மீண்டும் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார். கிரேட்டர் சென்னை சிட்டி போலீஸ் அந்தஸ்து சென்னை போலீஸ் கமிஷனரேட்டுக்கு வந்திருந்த (2013) கால கட்டம் அது. சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கை என்றாலே டிஜிபி அந்தஸ்துதான் என்று ஏழெட்டு காலம் நகர்ந்தது. எடப்பாடி அவர்களும் ஓபிஎஸ் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பில் இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் இருந்தனர்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

2021- ஆம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் ஆனார். டிஜிபி அந்தஸ்தில் இருந்த சங்கர்ஜிவால் கமிஷனர் பொறுப்பில் இருந்தார். அதே நேரம் டிஜிபி பதவி, காலியாகவே சங்கர்ஜிவால் டிஜிபி ஆனார். அதே டிஜிபி அந்தஸ்தில் இருந்த சந்தீப்ராய் ரத்தோர் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஆனார். கொஞ்ச காலம் பொறுப்பில் இருந்தார். இதே ஜூலை மாதம், பகுஜன்சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொ*லை செய்யப் பட்டார். அந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் ஆஜர் செய்யப்பட்டது தொடங்கி பல்வேறு விஷயங்கள் அரசுக்கு எதிராக வலுவெடுத்து பரவியது அல்லது பரப்பப்பட்டது. சந்தீப்ராய்ரத்தோர் மாற்றப் படுவார் என்று அடுத்தநாளே ஊகிக்கும் அளவு அது போனது. ஒருசில நாள்களில் ரத்தோர் மாற்றப்பட்டார்.

நமக்குத்தான் கமிஷனர் பதவி என்று சீனியர்  பலர் அதாவது டிஜிபி அந்தஸ்தில் இருந்த பலர் காத்திருக்க, அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆணை ஒன்று அப்போது வெளியானது. சென்னை கமிஷனரேட், டிஜிபி அந்தஸ்தில் இருந்து, கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு டி-கிரேட் செய்யப் பட்டிருப்பதாக அடிக்குறிப்பில் சொல்லப்பட்டிருந்தது. மேல் குறிப்பில், அதாவது முதல் வரிசையில், “சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் திரு. அருண் நியமனம் செய்யப்படுகிறார்” என்று சொல்லப்பட்டிருந்தது. அந்தப் பதவியில் அருண் நியமனம் செய்யப்படும் போது கூடுதல் டிஜிபி அந்தஸ்தில்தான் இருந்தார். இருப்பினும் அவரை சென்னை போலீஸ் கமிஷனராக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியின் தலைமை முடிவெடுத்து விட்டதால் எட்டு ஆண்டுகாலமாக நிலை நின்ற அப்- கிரேடு என்ற தகுதி நிலை, டி -கிரேடு என்ற தகுதி இறக்கம் ஆனது.

தமிழ்நாட்டில் யார் ஆட்சியை நடத்தினாலும், தெரிந்தோ- தெரியாமலோ எந்த முடிவை மேற்கொண்டாலும்,”அவசரப்பட்டு நாம் தவறு செய்து விட்டோமோ, அது புதிய முடிவோ, சரியாய் வருமோ” என்றெல்லாம், மனதை பிசைந்து கொள்ளத் தேவையே இல்லை. இங்கு எல்லா விதிகளும், எல்லா காலத்திலும் மீறப்பட்டே வந்துள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களே Chief Minister of Tamil Nadu  இதுபோன்ற விஷயங்கள் குறித்து எவர் குறைகூறி பேசினாலும் நீங்கள் அதை பொருட்படுத்தத் தேவையே இல்லை.

அதேபோல் நான் பொருட்படுத்தி எழுதுகிற விஷயங்களை, லட்சக்கணக்கில் பகிர்ந்து (‘தரமாக’) எழுத (!) உங்கள் தொண்டர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் என்பது வேறு. அவர்களுக்கு வாழ்த்தும் எப்போதும் போல பேரன்பும்.

(சென்னை போலீஸ் கமிஷனர் இருக்கையில் ஒரு நாளாவது இருந்து பார்த்து விட வேண்டும் என்பது தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களின் கனவு. இந்தியாவின் பிற மாநில கேடர்களில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் அதுவே கனவு என்று சொல்லமுடியாது- அது பெருங்கனவு. அந்த கனவு நிறைவேற என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்த பல ஐபிஎஸ்களை, எஸ்.பி., அந்தஸ்து தொடங்கி, டிஜிபியாக பணி ஓய்வு பெற்ற காலம் வரை, நெருக்கமாகவே அறிவேன்.)

 

—   ந.பா.சேதுராமன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.