திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும்வரைக்கும் அந்த வாசம் – வைரமுத்து நெகிழ்ச்சி
திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும்வரைக்கும் அந்த வாசம் – வைரமுத்து நெகிழ்ச்சி
மெஜஸ்டிக் மஹாராஜா
ஆடை மாளிகைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டேன்.
கடல்போல் அகன்றும்
மலைபோல் உயர்ந்தும்
நிமிர்ந்து நிற்கும்
நெடுமாளிகை அது
வாழ்த்திப் பேசினேன்:
“கவிப்பேரரசை இந்த விழாவுக்கு
ஏன் அழைத்தேன் என்று
மஹாராஜா உரிமையாளர்
ஆசிப் அலி
ஒரு நீண்ட பட்டியல் வாசித்தார்
என் வருகைக்கு
அந்தக் காரணங்கள்
எதுவும் தேவையில்லை
நானும் ஆடை உடுத்துகிறவன்
என்ற ஒரே காரணம் போதும்
90 ஆண்டுகளாய்ப்
படிப்படியாய் வளர்ந்துவரும்
மஹாராஜாவைப் பாராட்டுகிறேன்
ஒரு மனிதனுக்கு
இரண்டே இரண்டுதான்
மிக முக்கியம்.
ஒன்று உயிர்;
இன்னொன்று மானம்
உண்டி கொடுக்கிறவன்
உயிரைக் காப்பாற்றுகிறான்;
ஆடை கொடுக்கிறவன்
மானத்தைக் காப்பாற்றுகிறான்
அதனால் உங்கள் தொழில்
உயர்ந்த தொழில்
இந்தியாவில் 63 விழுக்காடு
ஆடை உற்பத்திதான்;
இந்தியாவின் 13 விழுக்காடு
ஏற்றுமதியும் அதுவேதான்
இந்தத் தொழிலுக்கு
வளர்ச்சி உண்டே தவிர
வீழ்ச்சி இல்லை
தஞ்சைக்கும் திருச்சிக்கும்
உள்ள தூரத்தைகக் கடக்க
உங்களுக்கு 90 ஆண்டுகள்
தேவைப்பட்டிருக்கிறது
நிதானமாக வளர்கிறீர்கள்;
நிரந்தரமாக நிலைபெறுவீர்கள்
வாழ்த்துகிறேன்”
ஆசிப் அலியும்
சகோதரர்களும்
மலர் மாலை என்ற பெயரில்
மலர் மலை ஒன்றை அணிவித்தார்கள்
சென்னைக்கு வரும்வரைக்கும்
அந்த வாசம் என் உள்ளங்கையில் ஒட்டியிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.