இரட்டைக் கொலை வழக்கு -ஆறு குற்றவாளிகள் கைது!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

08.11.2026 அன்று, வீரராகுல் (த/பெ. செல்வன்) மற்றும் விஷால் (த/பெ.ராஜா) ஆகியோர் தங்களது நண்பர்கள் ஆறு பேருடன், பட்டாசு தொடர்பான சம்பவத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தங்களது நண்பர் விக்னேஷை பார்ப்பதற்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, எட்டு பேரும் மருத்துவமனையிலிருந்து சுமார் 80 மீட்டர் தொலைவில் உள்ள அருகிலுள்ள இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஆறு குற்றவாளிகளும் ராகுல் மற்றும் விஷால் ஆகியோரை தாக்கியதில், இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக இறந்த விஷாலின் சகோதரர் கோகுல் அளித்த புகாரின் பேரில், சமயபுரம் காவல் நிலையத்தில் குற்ற எண்.386/2026, பிரிவு 103(1) BNS-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. CCTV காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள், சாட்சிகளிடம் விசாரணை மற்றும் பிற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல்துறையினர் கீழ்க்கண்ட ஆறு குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
எதிரிகளின் விவரங்கள்:
1 கெனிவின்ஸ் 19/26, த.பெ. ஜேசுராஜ், எண்.5/125, பாரதி நகர் 4வது தெரு. முத்தையாபுரம். தூத்துக்குடி மாவட்டம். (தற்போது செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சமயபுரம், மணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்)
2 ரெனிசன் 20/26. த.பெ.ஜேசுராஜ், முத்தையாபுரம், தூத்துக்குடி (தற்போது செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சமயபுரம் மணச்சநல்லூர், திருச்சி மாவட்டம்)
3. சரவணன் 18/26, த.பெ. நடராஜன், எண்.7ஃ417, காமராஜர் நகர், மருதூர், லால்குடி-தாலுக்கா, திருச்சி மாவட்டம்
4. சிவநேசன் 21/26, த.பெ. பாண்டியன் சோழன் நகர். பள்ளிவாசல் தெரு. இனாம் சமயபுரம், மணச்சநல்லூர்-தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
5. கிருபாகரன் 19/26, த.பெ. தங்கையன். எண் 96, சோலை நகர், சமயபுரம் மணச்சநல்லூர்-தாலுக்கா, திருச்சி மாவட்டம்.
6. ஹரிஹரன் 22/26, த.பெ.சின்னமாரி, சோலை நகர், சமயபுரம், மணச்சநல்லூர் தாலுக்கா, திருச்சிமாவட்டம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விசாரணையின்போது, இறந்த ராகுலுக்கும் குற்றவாளி கெனிக்கும் இடையே, ஒரு சிறுமியுடனான பழக்கம் தொடர்பாக ஏற்பட்டிருந்த தனிப்பட்ட தகராறு கொலைக்கான சாத்தியமான காரணமாக தெரியவந்துள்ளது. இருப்பினும், கொலைக்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணத்தை உறுதி செய்வதற்கான மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
11.11.2026 அன்று. குற்றவாளி சிவநேசனை கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர் காவல்துறையினரை நோக்கி கற்களை விசி தாக்கியதுடன். மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் காவல்துறையினரை தாக்க முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. காவல்துறையினர் எச்சரித்தும் அவர் தொடர்ந்து தாக்க முயன்றதால், தாக்குதலைத் தடுக்க காவல் ஆய்வாளர் திருகுணசேகரன் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், குற்றவாளி சிவநேசனின் இடது முழங்காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது.
காயமடைந்த குற்றவாளி மற்றும் இச்சம்பவத்தில் காயமடைந்த காவலர் ஆகியோர் உடனடியாக அருகிலுள்ள ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.