திருச்சி போலீசுக்கு அரிவாள் வெட்டு- டிமிக்கி கொடுத்த குற்றவாளிகள் கைது.
திருச்சி போலீசுக்கு அரிவாள் வெட்டு- டிமிக்கி கொடுத்த குற்றவாளிகள் கைது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை பிடித்த காவலருக்கு தலையில் வெட்டு. திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் விஜய் ( 23 ). பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ஆவார். இந்நிலையில் பாலக்கரை காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை காவலர் வேல்முருகன் தனது இருசக்கர வாகனத்தில் சங்கிலியாண்டபுரதிலிருந்து எடமலைப்பட்டி புதூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் நாகாவே பிரிட்ஜ் எதிர்ப்புறம் பைபாஸ் ரோட்டில் கடந்த 21/01/2021 சென்ற போது அங்கு நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வர மற்ற இரு நபர்கள் வண்டியின் பின்புறம் அமர்ந்து இருந்தார்கள்.

இந்நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தொடர் குற்றச் சம்பவங்கள் கொண்ட விஜய் எனும் நபர்என்று அறிந்த முதல் நிலை காவலர் வேல்முருகன் அவருடைய வாகனத்திற்கு முன்னால் தனது வாகனத்தை நிறுத்தி, விஜயின் சட்டையை பிடித்து கீழே இறக்க முயற்சி செய்தபோது. பின்னே அமர்ந்திருந்த விஜயின் நண்பர்களான யுவராஜ், பாண்டியன் இருவரில் யுவராஜ் திடீரென கத்தியால் காவலர் வேலுமுருகனின் தலையின் இடப்புறத்தில் வெட்டி கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் அருகிருந்த ஆட்டோவில் ஏறி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கரை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் காவலரை வெட்டி தப்பி ஓடிய மூன்று பேரையும் தேடிப்பிடிக்க கோட்டை காவல் உதவி ஆணையர் ரவி அபிராம் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த பாண்டியன் அரியமங்கலம் போலீசாராலும் விஜய் காந்தி மார்க்கெட் போலீசாராலும் நேற்று 22/1/2021 சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டனர்.இதில் போலீசாரை தாக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜ் 23/01/2021 இன்று திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆதரவுடன் ஆஜராகினர். அடிப்படையில் யுவராஜ் நீதிமன்ற உத்தரவின்படி லால்குடி கிளை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் போலீசாரை தலையில் வெட்டி விட்டு நீதிமன்றத்தில் குற்றவாளி தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.கே..







