வாரியத் தலைவர், கூட்டுறவு பதவிகளுக்கு விரைவில் தேர்தல் ; திமுகவினர் குஷி !
கட்சி பதவிகள் கிடைக்காதவர்கள், தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்கள் இப்படி இருந்தும் கட்சிக்கு விசுவாசமாக உழைக்கக்கூடிய முக்கிய நபர்களை திமுக தலைமை அடையாளம் கண்டறிந்து வருகிறதாம். இந்த நிலையில் விரைவில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு வருகிறது என்றும், இதில் கட்சியின் விசுவாசிகள் பலருக்கும், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் வாய்ப்பு வழங்க தலைமை முடிவு செய்திருக்கிறது என்ற செய்தியை அண்ணா அறிவாலய வட்டாரங்கள் பேசத் தொடங்கி இருக்கின்றன. இதனால் உடன்பிறப்புகள் பலரும் சந்தோஷத்தில் உள்ளார்களம்.
அதேசமயம் வாரிய தலைவருக்கான பதவிக்கும் புதிய நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்ற தகவலும் பரவ தொடங்கியதால் முக்கிய நிர்வாகிகள் பலரும் தலைமைக்கு தற்போதே தூது விடு தொடங்கியிருக்கிறார்கள். மேலும் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கும் சில வாரியத் தலைவர் பதவியை கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறதாம். இதனால் தினமும் சென்னை அறிவாலயத்திற்கு பல கார்கள் வந்து செல்கிறதாம்.