ஊரையும் சொல்லமாட்டேன்.. பெயரையும் சொல்ல மாட்டேன்.. இது ஒரு போலீஸ் கதை.

0

ஊரையும் சொல்லமாட்டேன்.. பெயரையும் சொல்ல மாட்டேன்.. இது ஒரு போலீஸ் கதை.

மலைக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் கருநிற பழத்தின் பெயரைக் கொண்ட காவல் நிலையம் ஒன்று இருந்து வருகிறது.

இந்த காவல் நிலையத்தில் ராசியோ என்னவோ தெரியல வர இன்ஸ்பெக்டர் எல்லாம் டிரான்ஸ்பர் கேட்டு போய் விடுவார்களாம்.

அந்த அளவுக்கு ஃபேமஸான காவல் நிலையம் அது.

கடந்த 2 மாதத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

ஆனால் திருடர்களை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் இருந்து வருகிறார்களாம்.

காரணம், போலீஸ் ஸ்டேஷன்ல ஸ்ட்ரென்த் ரொம்பவே கம்மியா இருக்கு தான்.

அதனால எந்த வழக்க பார்க்கிறதுனு தெரியாம விழிபிதுங்கி வராங்களாம்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் உடைய இன்ஸ்பெக்டர் எப்படியாவது தனது சொந்த ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைத்திடுமா என்று வெயிட்டிங்கில் இருந்து வருகிறாராம்.

அதனால ஸ்டேஷன் வர்றது ரொம்ப கம்மியாச்சாம்.

சரி நடந்த திருட்டு வழக்க விசாரிப்பதற்கு க்ரைம் போலீசில் இருப்பாங்களே என்று நினைத்தாள்,

அந்தத் க்ரைம் டிம கலச்சி 2 மாசம் ஆகுதாம்.

இதனால திருச்சி மாவட்டத்தில் நடந்த, திருட்டு சம்பவங்களை விசாரித்து வந்த போலீஸ் இல்லாமல் போய்ட்டாங்கலாம்.

மேலும் அந்த ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏராளமான திருட்டு சம்பவம் நடைபெற்று குற்றவாளி யாரென்று சிசிடிவியில் பதிவாகியும் பிடிக்காமல் இருந்து வருகிறார்களாம்.

பிரபல ரவுடிகளை கண்காணிப்பில் வைத்து வந்த க்ரைம் டீம் கலைக்கப்பட்டதால்தான் அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு தொடர்பான வழக்குகள் பெண்டிங்ல்லையே இருந்து வருகின்றதாம்.

– இந்திரஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.