ஏமாற்றத்தில் முடிந்த லிவிங் டூகெதர் வாழ்க்கை –மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முகநூல் காதலனை நம்பி தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடித்திவந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். குடிகார காதலனுடன் லிவிங் டுகெதர் வாழ்கையில் இணைந்த மாணவிக்கு நேர்ந்த சோக முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

ஈரோடு மாவட்டம் பாலவாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகள் இந்துமதி. 20 வயதான இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இந்துமதி, ஒரத்தநாடு கால் நடை மருத்துவ மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் ஒரத்த நாடு எழுத்துக்கார தெருவில் உள்ள ஒரு வீட்டில் இந்துமதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

அந்த வீட்டில் அவரது சடலத்துக்கு அருகே குடி போதையில் சதீஷ்குமார் என்ற இளைஞர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மருத்துவ கல்லூரி மாணவி இந்துமதி, இந்த வீட்டிற்கு வந்து உயிரிழந்தது எப்படி ? என்று அறிய போதையில் படுத்திருந்த சதீஷ் குமார் தலையில் தண்ணீரை ஊற்றி விசாரித்த போது இந்துமதி முகநூல் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்த திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது

எப்போதும் செல்போன் கையுமாக வலம் வரும் இந்துமதி முகநூல் சாட்டிங்கில் மூழ்கி கிடந்ததாக கூறப்படுகின்றது. அப்போது இந்துமதிக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த டி.புதுக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

தலையில் வித்தியாசமான முடிவெட்டு..! முகத்தில் கூலிங்கிளாஸ்..! என வித விதமான புகைபடங்களை முக நூலில் பதிவிட்ட சதீஷ்குமார் தன்னை ஒரு பொறியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்துமதியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 2 ஆண்டுகளாக முகநூலில் காதலித்ததோடு, அவ்வப்போது நேரில் சந்தித்தும் காதலை வளர்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் லிவிங் டுகெதர் போல அவ்வப்போது வெளியில் அறை எடுத்து தங்கியும் வாழ தொடங்கி உள்ளனர்.

இவர்களின் காதல் பிணைப்பு அதிகமானதால் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருப்பதாக பெற்றோரிடம் பொய் சொன்ன இந்துமதி, கணவர் சதீஷ்குமாருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வாடகைக்கு வீடு பார்த்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அங்கிருந்தபடியே கல்லூரிக்கும் சென்று வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சதீஷ்குமார் பொறியாளர் அல்ல எலக்ட்ரீசியன் என்பதும், அவன் ஒழுங்காக வேலைக்கு செல்லாத குடிக்காரன் என்பதும் திருமணத்திற்கு பின்னர் தெரியவந்துள்ளது. தினமும் இரவு குடி போதையில் வீட்டுக்கு வருவதை சதீஷ்குமார் வாடிக்கையாக வைத்திருந்ததால் இருவருக்கும் அடிக்கடை தகராறு ஏற்பட்டுள்ளது.

தங்கள் மகள் கல்லூரியில் படித்து வருகிறாள் என்று மாத, மாதம் பெற்றோர் செலவுக்கு பணம் அனுப்பி வைக்க, இந்துமதி திருமணம் செய்துகொண்டு கணவருடன் தனியாக வாழ்ந்து வந்தது அவரது பெற்றோருக்கு தெரியவில்லை என்றே கூறப்படுகின்றது. விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது போன்றே வீட்டில் காட்டிக்கொண்ட இந்துமதி அவ்வப்போது ஊருக்கு சென்றுவந்ததால் பெற்றோருக்கும் சந்தேகம் வரவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை போதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், இந்துமதியை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. தானே தேடிக் கொண்ட வாழ்க்கை தன்னை படுகுழியில் தள்ளி விட்டது என்று எண்ணி விரக்தியில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்துமதியின் பெற்றோரோ தங்கள் மகளை அடித்து கொலை செய்து சதீஷ்குமார் தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனால் மருத்துவ மாணவி இந்துமதி தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்ற இரு வேறு கோணங்களில் காவல்துறையினர் காதல் கணவர் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் பெண்கள் படிக்கின்ற வயதில், பெற்றோரை ஏமாற்றிவிட்டு, ஆண் நண்பர்களுடன் முக நூல் சாட்டிங்… வாட்ஸ் ஆப் டேட்டிங்… என்று பொறுப்பின்றி சுற்றினால் முடிவில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த சோக சம்பவம்..! .

அதே வேளையில் வெளியூரில் தங்கிப் படிக்கும் பெண்களை வாய்ப்பு நேரும் போதெல்லாம் பெற்றோர்கள் சென்று பார்த்து அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வதும் அவசியம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது…

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.