அதிமுக வென்ற இடத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட அதிமுக செயலாளர் !
அதிமுக வென்ற ஜெயித்த இடத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட
அதிமுக செயலாளர் !
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிக்கும் கடும் போட்டியில் முதல் முறையாக அ.தி.மு.க வசமானது. மணப்பாறை நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 11 இடங்களிலும், அதிமுக 11 இடங்களிலும் வெற்றி பெற்று சமபலத்தடன் இருந்தது.
இதில் வெற்றி பெற்ற 5 சுயேட்சைகள் தீர்மானிப்பவர்களே மணப்பாறை நகராட்சியை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் மறைமுக தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு கீதா.மைக்கேல்ராஜ் என்பவரும், அதிமுக சார்பில் சுதா பாஸ்கரன் போட்டியிட்டனர்
மறைமுக தேர்தலில் மொத்தம் பதிவான 27 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 15 வார்டுகளில் திமுக வேட்பாளர் 12 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த சுதா பாஸ்கரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுமார் 56 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக மணப்பாறை நகராட்சி அதிமுக கைப்பற்றியுள்ள நிலையில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் அதிமுக தலைமை கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் மணப்பாறை தெற்கு மாவட்ட தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நாம் விசாரித்த போது… வெங்கடாசலம் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும், அதிமுக கவுன்சிலர்கள் சிலரை திமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லி செயல்பட்டார் என்றும், அதிமுக கவுன்சிலர்களை தலைவர் பதவிக்கு போட்டி போட கூடாது திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கட்சி தலைமைக்கு புகார் சென்றதை அடுத்தே இந்த நீக்கம் என்கிறார்கள்…
இதற்கு இடையில் ஆளும் கட்சியான திமுக தலைமையை… ஜெயித்து இருக்க வேண்டிய மணப்பாறை நகராட்சியை அதிமுக எப்படி ஜெயித்ததது, ஓட்டு யார் மாற்றி போட்டார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.