சிதம்பரம், மாணிக்தாகூரை வீழ்த்திய விச்சு !
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரிய பரபரப்புடன் நடைபெற்றதில் சிதம்பரம், மாணிக்கம் தாகூர் ஆகியோரை வீழ்த்தி செல்வபெருந்தகை ஆதரவாளர் திருச்சி விச்சு என்கிற லெனின் பிரசாத் வெற்றி பெற்று இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கப்பட்டவுடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகிய இருவரும் இந்த தேர்தலில் தங்கள் ஆதரவாளரை வெற்றிபெற வைக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத்தொடங்கினர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஏன் இவ்வளவு மவுசு என நாம் விசாரித்ததில், இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவருக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் சீட் கொடுக்கப்படும். இது மட்டுமல்லாமல் செயல்பாடுகள் நன்றாக இருப்பின் கட்சியில் தொடர்ந்து ஏறுமுகம் தான். இதனால் தான் இந்தப் பதவிக்கு காங்கிரஸில் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதாக தகவல் கிடைத்தது.
குறிப்பாக இந்த தேர்தலை சிதம்பரம், மற்றும் மாணிக்தாகூர் இரண்டு பேரும் பிரஸ்டிஜ் விசயமாக கருத்தினர்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்.எல்.ஏ.வின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 35 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் இப்போது தலைவராக உள்ள ஹசன் மவுலானா எம்.எல்.ஏ. மீண்டும் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் மாநில அளவில் 34 பதவிகளும், மாவட்ட அளவில் 24 பதவிகளுக்கு உள்ளது.
இந்த இடங்களில் எல்லாம் தங்கள் ஆதரவாளர்கள் பொறுப்புக்கு வந்தால் தான் கட்சியில் தங்களுக்கான செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் எனக் கருதும் மாணிக்கம் தாகூரும், கார்த்தி சிதம்பரமும் உட்கட்சி தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டினர்.
கடந்த முறை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக வெற்றிபெற்ற ஹசன் மவுலானாவும், ஊர்வசி அமிர்தராஜூம் மாணிக்கம் தாகூர் ஆதரவாளர்கள். இருவருமே சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதை வைத்து மாணிக்கம் தாகூரை நம்பினால் நல்ல எதிர்காலம் என்ற பரப்புரையை அவரது தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.
தென் மாவட்டம் பாஜகவில் கொங்குமண்டலத்தை சேர்ந்த அண்ணாமலை மாநில தலைவராக இருப்பதால், இளைஞர் காங்கிரஸ் தலைவராக கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை கொண்டுவர விரும்பிய மாணிக்கம்தாகூர். பெரியளவில் பண பலமோ, குடும்ப பின்புலமோ இல்லாத ஜி.ஆர்.நவீன்குமாருக்கு களத்தில் இறக்கினார். இதற்கு சற்றும் சளைக்காமல் கார்த்தி சிதம்பரம் தரப்பும் தலைவர் பதவிக்கான ஜோஸ் என்பவரை களத்தில் இறக்கினர்.
இரண்டு இலட்சத்து நான்காயிரம் ஓட்டு வாங்கி – 75,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த அரவானூர் விச்சு .
அதேநேரம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கும் பொழுது இரண்டு அணிகளை கடந்து மூன்றாவதாக அரவானூர் விச்சி மனு தாக்கல் செய்தபோது இரண்டு அணியினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது மட்டுமல்லாமல் மூன்றாவதாக ஒருவர் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறாரே என்று வேட்பாளரை அழைத்து சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் விச்சு அரசியல் தான் எனக்கு வாழ்க்கை என்று கூறி மூத்த தலைவர் கோரிக்கையை புறக்கணித்து விட்டாராம். இந்த நிலையில் நடைபெற்ற தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் மூன்றாவதாக ஒரு அணி களத்தில் இறங்கி வெற்றியை பெற்று இருப்பது தமிழக இளைஞர் காங்கிரஸின் ஆதிக்கம் செலுத்திய இரண்டு அணிகளிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மூன்றாவதாக ஒரு அணி வெற்றி பெற்றிருப்பது தமிழக காங்கிரஸ் மாற்றுப் பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது என்பதைக் காட்டியுள்ளது.