15வயது சிறுமியுடன் 40 வயது திருமணமானவர் தலைமறைவு – கைது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

15வயது சிறுமியுடன் 40 வயது திருமணமானவர் ஓட்டம் !  

 

கூத்தாநல்லூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து உள்ளனர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சிறுமியுடன் மாயம்

 

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பிரதாபராமபுரத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40). கம்பி பிட்டரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

 

3

இந்த நிலையில் பழனிச்சாமி கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை  வடபாதிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமி மற்றும் சிறுமியை நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தேடி வந்தனர்.

 

4

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் பழனிச்சாமி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் திருத்துறைப்பூண்டிக்கு சென்று பழனிச்சாமியை பிடித்து  சிறையில் அடைத்தனர்.

 

சிறுமியை மீட்டனர் கைது!

 

பழனிச்சாமியிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனிச்சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இதற்கிடையே 15 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் கூத்தாநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.