போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு ! வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேளாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை மருங்காபுரி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி, செட்டியபட்டி, கோவில்பாறைக்களம், பகுதியை சேர்ந்த சின்னையா 21/22, த.பெ. துரை என்பவர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கடந்த 07.04.2022 அன்று கடத்திச்சென்று, பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி காவல் நிலைய குற்ற எண். 72/22, U/s Girl Missing @ 366, 450 IPC r/w 5(1), 6(1) of POCSO Act ன் படி 11.04.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (05.08.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா அவர்கள் எதிரி சின்னையா 21/22, த.பெ. துரை, கோவில்பாறைக்களம். செட்டியபட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, மருங்காபுரி, திருச்சி மாவட்டம் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய். 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த துவரங்குறிச்சி காவல் நிலைய நீதிமன்ற காவலர் முத்து என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப பாராட்டியுள்ளார்.






Comments are closed, but trackbacks and pingbacks are open.