சரவணன் IPS ! க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த  அதிகாரி !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

2001 வருட குரூப் 1 மூலம் நேரடி DSP  களாக தமிழக காவல்துறையில் அடியெடுத்து வைத்தவர்கள் 14 பேர்கள். அதில் மூன்று பேர்கள் மட்டுமே பெண்கள். இரண்டு பேர் விடை பெற்று விட்டனர்.

மவுண்ட் துணை கமிஷனராக நமக்கு அறிமுகமானவர். துணைக்கமிஷனர்களில் சிரித்த முகத்துடன் , சாந்தமே உருவான துணை கமிஷனர்களை விரல் விட்டு தான் எண்ண வேண்டி இருக்கிறது. தரவரிசையில் தன் அதிரடி பெர்பார்மன்சால் டைரக்ட் IPS அதிகாரிகளையே அண்ணாந்து பார்க்க வைத்த ஒரு ஆல்ரவுண்டர்  IPS அதிகாரியின் பெயர் S. சரவணன்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அதிகமாக பேச மாட்டார். கண்டுபிடிக்க முடியாத ஆதாய கொலைகள் (Murder for Gain)  மற்றும்,  தாமஸ் மலை உச்சியில் வந்து விழுந்த ஒரு கற்பழிப்பு கொலை போன்றவற்றை 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த துணை கமிஷனரும் தூசி தட்டிஅந்த CD  File ஐ கையில் எடுத்ததில்லை. சரவணனிடம் மேற்கண்ட 3 கொடும் கொலை  குற்ற வழக்குகளை   குறித்து கேட்டபோது நாம் கேட்டு முடிப்பதற்குள் , DO , DR , SOC , Crime Number  இவற்றோடு வழக்கு விவரங்களை இவர்  பதற்றமின்றி  ,  பட்டியலிட்ட போதே தெரிந்து விட்டது  , ” இந்த துணை கமிஷனர் வேற மாதிரி ” என்று.

அடுத்த பயணம்  T. நகர் மாவட்டம். அரசியல் ஆதிக்கம் அளவு கடந்து நிற்கும் இந்த மாவட்டதில், துணை கமிஷனர்களை தூங்க விடாது. சரவணன் மிகச்சிறந்த கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் இந்த “தீ.நகரை”. அடுத்த பயணம் மயிலாப்பூர். குற்றவாளிகளின் கூடாரம் மயிலை. இந்த கோவில் நகரத்திற்குள் குடியிருந்தாலும் , சில தரமான சம்பவங்களை சந்தடியே தெரியாமல்  செய்து முடித்திருக்கிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

சரவணன்
சரவணன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆனால், இவற்றையெல்லாம்  முளையிலேயே  கிள்ளியெறியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை துணை கமிஷனராக இருந்த  சரவணனிடம் தான் இருந்தது.

அக்காவையும் அவரது  கணவரையும் விஷம் கொடுத்துக் கொன்றதை சாதாரண மரணம் என்று  போலீசை நம்ப வைத்து விட்டாள் தங்கை. இரண்டு வருடங்கள் கழித்து அந்த சிடி பைலை தூசி தட்டி எடுத்திருந்தார் சரவணன். மறு விசாரணையில் அதை கொலை  என்று கண்டுபிடித்து    அத்தனை பேர்களையும் வளைத்திருக்கிறார் சரவணன். க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனில் கைதேர்ந்த இந்த  அதிகாரியிடம் இருந்து பல சிறப்பு பாடங்களை கற்று இருக்கிறார்கள் மயிலை மாவட்ட  அதிகாரிகளும் காவலர்களும்.

எஸ்.பி.யாகவும், ரேன்ஜ் DIG யாகவும் இருந்து மாவட்டங்களையும்  கலக்கி இருக்கிறார் சரவணன். ஆட்சி மாற்றம்  மிக மிக சென்சிடிவான உளவுத்துறையில் இவரை கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறது. தன் தனித்திறமையால் தள்ளாட்டமில்லாமல் இதிலும் தன் முத்திரையை பதித்து விட்டார் சரவணன்.

அன்று  சிட்டி போலீஸில் உள்ள சில துணை கமிஷனரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் கீழ் உள்ள அதிகாரிகள். ” கையேந்துபவர்களால் கீழே உள்ளவர்களை கண்டிக்கவும் முடியாது , தண்டிக்க முடியாது ” என்பதே அந்த உண்மை.

—   இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.