” ஐ ஆம் கேம் கன்பார்ம் சூப்பர் கேம்” துல்கர் சல்மான் நம்பிக்கை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

துல்கர் சல்மானின் ‘வே ஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து ஜோம் வர்கீஸ் தயாரித்துள்ள படம் ‘ஐ ஆம் கேம் ‘. மலையாள சினிமாவில் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் நாளை ( செப்டம்பர் 03) தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

‘ஆர்டிஎக்ஸ்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை டைரக்ட் பண்ணிய நஹாஸ் ஹிதயத் டைரக்ட் பண்ணியுள்ள ‘ ஐ ஆம் கேம்’- ல் துல்கர் சல்மான், கயாது லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன், ஆண்டனி வர்கீஸ், நம்ம ஊரு கதிர், டைரக்டர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை : சஜீர் பாபா, அபுபக்கர் ஒளிப்பதிவு: ஜிம்ஷித் காலித், இசை: ஜேக்ஸ் பிஜாய், பிஆர்ஓ: யுவராஜ்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சம்யுக்தா விஸ்வநாதன்
சம்யுக்தா விஸ்வநாதன்

கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று ( செப்.01) மதியம் சென்னையில் நடந்த புரமோவுக்கு வந்தார் துல்கர் சல்மான். இவருடன் சம்யுக்தா விஸ்வநாதன், கதிர், ஆண்டனி வர்கீஸ் ஆகியோரும் வந்திருந்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நிகழ்ச்சியில் கதிர் பேசும் போது, “அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் இந்த கேம் பிடிக்கும்.துல்கர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகச் சிறந்த தயாரிப்பாளரும் கூட” என்றார்.

சம்யுக்தா விஸ்வநாதன், “டைரக்டர் நஹாஸின் கடின உழைப்பு, துல்கர் சல்மானின் பக்கா பிளான் இந்த இரண்டும் தான் இந்த கேம் வெற்றிக்கு காரணம்”.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

துல்கர் சல்மான், “எனது படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் சென்னைக்கு வந்து மீடியாக்களை சந்திப்பேன். இதற்கு முன்பு ‘லக்கி பாஸ்கர் ‘ புரமோஷனுக்கு சென்னை வந்தேன். படம் மெகா ஹிட். இப்ப இந்த ‘ ஐ ஆம் கேம்’- படத்திற்கு வந்திருக்கேன். மலையாள சினிமாவில் மெகா பட்ஜெட்டில் தயாரான படம். நஹாஸின் டைரக்க்ஷன் அதை இன்னும் பெரிதாக்கியுள்ளது. ஐ ஆம் கேம்’-கன்பார்ம் சூப்பர் கேம், நல்ல ஹிட் அடிக்கும் கேம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எப்போதும் என்னை ஆதரிக்கும் தமிழ் ரசிகர்களும் மீடியாக்களும் இந்தப் படத்திற்கும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை யுடன் மீண்டும் வருகிறேன்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.