தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் ‘எம்செட் 2026’ பன்னாட்டு மாநாடு !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி சார்பில், “பரிணமிக்கின்ற மாற்றங்களுக்கான பல்துறை தீர்வுகளின் சர்வதேச மாநாடு2026”(Multidisciplinary Solutions for Emerging Trends – MSET 2026) என்ற மையக்கருத்திலான இரண்டாவது சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது. இம்மாநாடு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் நடைபெறுகிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர் சி. கே ரஞ்சன்  மற்றும் பதிவாளர் முனைவர் எஸ்.செல்வகுமார் ஆகியோர் ஆதரவில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க விழா, பல்கலைக்கழக கல்விக் கட்டடத்தின் ஆறாவது தளத்தில் உள்ள விரிவுரை அரங்கில் குத்துவிளக்கேற்றலுடன் இனிதே தொடங்கியது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கல்விசார் புல முதல்வர் டாக்டர் வி. ஈவ்லின் பிருந்தா முதன்மைச் சிறப்புரையாற்றினார்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் புல முதல்வரும் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எஸ். பத்மபிரியா அனைவரையும் வரவேற்றார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவரும் டாக்டர் பி. கீதா மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கவுரையாற்றினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உயிர் மருத்துவப் பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் பி. சண்முகம் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்துவைத்தார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக நேபாள நாட்டின் திரிபுவன பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சுவர்ணா ஷக்யா மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் ஜி. குழந்தைவேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் எதிர்கால சவால்களுக்கான தீர்வுகள் குறித்து அவர்கள் தங்கள் உரையில் எடுத்துரைத்தனர்.

தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக, மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் இணைந்து மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பினை வெளியிட்டனர்.

தொடக்க விழாவைத் தொடர்ந்து தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரை அமர்வுகள் தொடங்கின. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.