13 ஆம் மாடியில் இருந்து குதித்து திருச்சி கல்லூரி பேராசிரியர் தற்கொலை !
13 ஆம் மாடியில் இருந்து குதித்து திருச்சி கல்லூரி பேராசிரியர் தற்கொலை !
13 ஆம் மாடியில் இருந்து குதித்து திருச்சி கல்லூரி பேராசிரியர் மரணம் அடைந்தது திருச்சியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சௌமியா திருச்சி காவேரி கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். கணவர் பிரேம்குமார் பல்வேறு வியாபாரங்கள் மேற்கொண்டு வருகிறார். ஒரே சமூத்தை சேர்ந்த இருவரும் காதல் திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகிறது. இவருக்கு 11 வயதில் ரியா மற்றும் 6 வயதில் சிவியா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த இரண்டு வருடமாக திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள SIS அப்பாட்மெண்டில் 13/19 என்கிற சொந்த குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்கள். பேராசிரியர் சௌமியா கல்லூரியில் மாணவிகளுக்கு சுயதொழில் குறித்த முன்னேற்ற பயிற்சி தொடர்ச்சியாக எடுத்துவருபவர் என்பது குறிப்பிடதக்கது. எப்பொழுதும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் இருக்கும் பேராசிரியர் எப்படி இந்த முடிவு எடுத்து மரணம் அடைந்தது பேராசிரியர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.
உடல் சிதறி கிடந்த பேராசிரியரின் உடலை எடமலைப்பட்டிபுதூர் போலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பேராசிரியரின் மரணம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.