ஆளும் கட்சி தொண்டர்களுக்கு தீபாவளி போனஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

அரசியல் கட்சி தொண்டர்களிலேயே ஆளுங்கட்சி தொண்டர்கள் தான் எப்போதும், மகிழ்ச்சியோடு, சர்வ பலத்தோடும் இருப்பார்கள் . தற்போதைய ஆளுங்கட்சியின் தொண்டர்கள் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளாக இருந்து கடுமையான போராட்டங்களை எல்லாம் கடந்து  தற்போது ஆளுங்கட்சியானவுடன் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும் நாலுகாசு சம்பாதிக்கலாம் என்றெல்லாம் கனவு கோட்டை கட்டியிருந்தனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

 

ஆனால் கடந்த ஆட்சியை பரவாயில்லை என்று சொல்கிற அளவுக்கு கடுமையான வறட்சியில் இருக்கிறார்கள்.  ஆட்சி வந்ததும் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம் ஏதாவது சின்ன சின்ன டெண்டர் எடுத்து கமிஷன் பார்த்துக் கொள்ளலாம் என்கிற ஆசையில் துள்ளிக்குதித்தவர்கள், எல்லாம் கட்சியினர் இடையே வருமானம் இல்லாதது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

 

அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமே கட்சிக்கு பணம் வேண்டும் தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்று தனி கமிஷன் வசூல் செய்வார்கள். தற்போதும் அதே நிலை ஆளும்கட்சியின் நிலவி வருவதாக சொல்கிறார்கள் மூத்த அமைச்சர்கள்.

 

நிறைய சம்பாதிக்க முடியும் என்று நினைத்த அமைச்சர்களே மாதம் மாதம் ஆளும்கட்சியின் மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம் என்று தனக்கு கீழ் உள்ள தொண்டர்களுக்கு நினைத்த அளவு தாராளமாக கொடுக்க முடியாத நிலை தட்டுதடுமாறி வருகின்றனர்.

.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

 

தொண்டர்களிடையே கடுமையான நிதி நெருக்கடியும் மன உளைச்சலுக்கும் கட்சியின் மீது அதிர்ப்தியை ஏற்பட்டு வருகிறது என்பதை  அறிந்த அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று மா.செ. பதவி வாங்கிய முன்னாள் மா.செ. ஒருவர் – சின்ன டென்டர்களின் கமிஷன்களை கட்சி நிர்வாகிகளை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னது நிர்வாகிகள் இடையே பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அத்தோடு இல்லாமல் கிளைச்செயலாளர்கள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவருக்கும் ஓரே நாளில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் கொடுத்தது ஆளும்கட்சியின் மாப்பிள்ளையின் காதுக்கு எட்டியது.

ஆளும் கட்சி தொண்டர்கள்
ஆளும் கட்சி தொண்டர்கள்

ஆளும்கட்சியின் மாப்பிள்ளையின் ஆலோசனையின் பெயரில் ஆளும் கட்சியின் சீனியர் அமைச்சர்களுக்கு ஷாக் கொடுக்கும் அந்த அமைச்சர் தனது துறையில் இருந்து தீபாவளியை முன்னிட்டு கட்சி முக்கிய நிர்வாகிகள் முக்கிய பொறுப்பாளர்கள் என பிரித்து,  தீபாவளி போனஸ் கொடுப்பதற்காக 110 சி நிதி கொடுத்து இருக்கிறார்.

 

தீபாவளி போனஸ் தொகையை வாங்குவதற்கு வந்த சீனியர் அமைச்சர்களிடம் ஆளும்கட்சி மாப்பிள்ளை, சீனியர்அமைச்சர்களை நீங்கள் உங்கள் கட்சியினருக்கு கொடுக்க வேண்டியது, தலைமை கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டுமா ? என்று கடிந்து கொண்டாராம்.

 

போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று சொல்லப்படும்

 

ஆக அடுத்த சில நாட்களில் ஆளும்கட்சி தொண்டர்களுக்கு தீபாவளி கிடைக்க போகிறது..

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.