ஜெயலலிதா மரணம்… ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை…உணர்த்தும் உண்மைகள்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஜெயலலிதா மரணம்…

ஆறுமுகசாமி
ஆணைய அறிக்கை…

Sri Kumaran Mini HAll Trichy

உணர்த்தும் உண்மைகள்…

 

தான் ஆட்சி அதிகாரத்தில்
இருந்தவரைக்குமாக

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டவராகவும்
எதிர் கொண்டு எவ்விதமான கேள்விகளும்
கேட்கப்படாதவராகவே
ஒரு விதமான
சர்வாதிகாரத் தன்மையுடன்
தன்னைத் தகவமைத்துக் கொண்டவர்
ஜெயலலிதா.

அதுவே அவரது பெரும் பலமும்
பெரும் பலவீனமாகவும்
ஆகிப் போனது.

உயிருடன்
நடமாடியவரை
தமிழக அரசியலில்
ஆகப் பெரும் சக்தியாக
வலம் வந்தவர்.

உடன்பிறவா
தோழியாக
ஜெயலலிதாவின்
உள் மன சுக துக்கங்களில்
இணைந்து
நிழலெனப்
பயணித்தவர்
சசிகலா.

போயஸ் கார்டனில்
வெளியேறுதலும்
திரும்புதலுமாக
இருந்து வந்தவர்…

அவ்வளவு ஆதிக்க
சக்தி மிகுந்தவராக
இறுதி வரை வாழ்ந்து
வந்த ஜெயலலிதாவின்
இறுதி நாட்களை…

இப்படித் தான்
வடிவமைப்பார் சசிகலா என்று
அந்த ஜெயலலிதாவே
கனவிலும்
கண்டு தொலைத்திருக்க
மாட்டார்.

அப்பல்லோவுக்குச்
செல்லும் முன்பாக
மூன்று நாட்கள்
கடும் காய்ச்சலால்
அவதிப்பட்ட ஜெயலலிதாவுக்கு…

அந்த மூன்று நாட்களிலும் தொடர்ந்து
வெறும் பாரசிட்டமால்
மாத்திரை மட்டுமே
தரப்பட்டு வந்துள்ளதாகத் தகவல் தருகிறது
ஆறுமுகசாமி
ஆணையத்தின்
அறிக்கை.

அதன் பின்னர்
அப்பல்லோ
மருத்துவமனையில்
எழுபத்தைந்து
நாட்கள்…

உயிர் நலம் காக்க வேண்டி தொடர்
மருத்துவமனை வாசம்.

அப்போது பொறுப்பு முதல்வராகப்
பணியாற்றிய
ஓ. பன்னீர்செல்வம் உட்பட அனைத்து
அமைச்சர்களும்…

அப்பல்லோ மருத்துவமனையின்
அங்கீகரிக்கப்படாத
வாயிற்காப்பான்களாக அருமையாகப்
பணியாற்றினார்கள்.

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர்
வெளிநாட்டு மருத்துவர்கள்
“வந்து” பார்த்தனர்.

ஆளுனர் முதல்
மத்திய அரசின்
அமைச்சர்கள் வரை
“வந்து” பார்த்தனர்.

அதிமுக அமைச்சர்களில் சிலர் மருத்துவமனை
வாசலில் நின்றபடி
“அளந்து” விட்டனர்.

அம்மா ஒரு இட்லி சாப்பிட்டாங்க…

Flats in Trichy for Sale

ஒரு கை தயிர் சாதம்
சாப்பிட்டாங்க…

எல்லாம்
இருக்கட்டும்.

ஒரு மாநில முதல்வர்
சிகிச்சை பெற்று வரும் அறையினை
எவருமே நுழைந்து பார்த்திடாத வண்ணம் அத்தனை இரும்புத் திரைப் பகுதியாக அதனை
உருவாக்கி நிலை நிறுத்தியிருந்த
“மகா சக்தி” எது???

மருத்துவமனைக்குச் சென்று வந்தவர்களில்…

ஜெயலலிதாவின்
தீவிர விசுவாசியான
பொதுவுடமைக் கட்சியின் முக்கியத்
தலைவர் ஒருவரிடம்
“ஜெயலலிதாவை நீங்கள் பார்த்தீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

Jayalalitha's death...  Arumugasamy Commission Report...  Impressive facts...
Jayalalitha’s death… Arumugasamy Commission Report… Impressive facts…

 

சொல்லேறு வல்லுனரான அவர் சொன்னார்…
“பார்த்தவர்களை நான் பார்த்து விட்டு வந்தேன்.” என்று.

எப்பேர்ப்பட்டவரது
வாழ்வும்…
ஏதோ ஒரு கணத்தில்
நிறைவு எய்தி விடும்
அல்லவா???

ஜெயலலிதா
மரணம் அடைந்து விட்டார் என்று
முறைப்படியாக அறிவித்தது அப்பல்லோ மருத்துவமனை
நிர்வாகம்.

இப்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை…

சாட்சியங்களின் அடிப்படையில்
ஜெயலலிதா
அதற்கு முதல் நாள்
மாலையே மரணம் அடைந்து விட்டதாகத்
தகவல் தெரிவிக்கிறது.

குறிப்பிட்ட
நான்கு நபர்களைக்
குற்றவாளிகளாகக் கருதி அவர்களிடம்
“தக்கபடி” விசாரித்து
இறுதி முடிவுக்கு
வருமாறு அறிவுறுத்தியுள்ளது
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை.

அந்தக் குறிப்பிட்ட
எண்பது நாட்களின்
மானுட குண நலம்
அற்ற அனைத்து விதமான தரங்கெட்ட
செயல்பாடுகளிலும்…

சசிகலா உட்பட குறிப்பிட்ட நால்வருடன்…

அப்போதைய பொறுப்பு முதல்வர் முதல் ஏனைய அதிமுக அமைச்சர்கள் வரை குற்றவாளிகள் தானே???

அப்பல்லோ மருத்துவமனைக்குள் சசிகலாவினால்
கட்டமைக்கப்பட்டு
இருந்த அத்தனைக்
கடிமான இரும்புத் திரையினை…

கிழித்து எறிந்திட சுற்றியிருந்த
நபர்களில் ஒரு நபருக்கேனும்
அந்தத் துணிவு
வராது போனது ஏன்???

வாழ்ந்தவரைக்கும்
விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டவராக
வாழ்ந்து கொண்டிருந்த
ஜெயலலிதாவை…

சசிகலாவும்
சசிகலாவுக்கு
அஞ்சி வலம் வந்தவர்களும்…

ஜெயலலிதாவின்
மரணத்தை…

ஏதோ
மாய ஜாலக்
கதை போல
திரைக்கதை
இயக்கம்
அமைத்துத்
தந்து விட்டார்கள்.

@ ஸ்ரீரங்கம்
திருநாவுக்கரசு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.