திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல்  செய்தனர்.

திருச்சி கிராப்பட்டி டிஇஎல்சி சுடுகாடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றதாக, கிராப்பட்டி  முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (வயது54)என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தார். அவரிடமிருந்து 50 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதேபோன்று திருச்சி பாலக்கரை  காஜாப்பேட்டை பொது கழிப்பிடம் அருகே புகையிலைப் பொருட்களைவிற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (வயது30) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 25 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.​தில்லைநகர் வாமடம் ரெயில்வே கேட் அருகே  பீமநகரைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது19) என்பவரை கைது செய்தனர் அவரிடமிருந்து  120 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உறையூர் 80 அடி சாலையில் உள்ள  டீ ஸ்டால் அருகே,புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் செவ்வந்தி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (வயது47) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து  30 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்தனர்.

திருச்சி கொடப்பு பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக குழுமணி அருகே உள்ள பேரூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 27) என்பவரைக் அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர் அவரிடமிருந்து  100 கிராம் ஹான்ஸ் பை பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேற்கண்ட வழக்குகளில்​ கைது செய்யப்பட்ட 5 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.