மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 9
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 9
உயிர் வாழ்க்கை வேறு. உயர் வாழ்க்கை வேறு. உயிர் வாழ்க்கை செம்மையுற வேண்டுமென்றால் உடல் நலம் வேண்டும். உயர் வாழ்க்கை வேண்டும் என்றால் உள்ளம் செம்மைப்பட வேண்டும். அதற்கு கலை இலக்கியமே முகமை.
அதன் வகையில் நம் உடல் நலத்திற்கான சித்த மருத்துவர்தான் மருத்துவர் சா. காமராஜ் அவர்கள். அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவத் துறையின் திருச்சி மாவட்ட உயர் அதிகாரியாகவும், மருத்துவ நூல்கள் பல எழுதி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகிறார். ‘நலமும் வளமும் நம் கையில்’ ‘நாள்பட்ட நோய்களுக்குச் சித்த மருத்துவம்’ என்கிற மருத்துவ நூல்கள் ஆசிரியர்.

தான் முயன்று கற்ற மருத்துவம் ஏழை எளிய மக்களுக்கு மிக எளிதாகக் கிடைக்க வழிவகை செய்து தருவதோடு… மக்களின் மனங்களும் செம்மையுற மேலும் பல விழிப்புணர்வு நூல்கள் தர வேண்டி வாழ்த்துவோம்.
-பாட்டாளி