மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சபெருமாள்பட்டி, கோம்பை பகுதியை சேர்ந்த பெரியசாமி 29/21, த.பெ.ஜெய்சங்கர் என்பவர் தனது மனைவி லட்சுமி (எ) புஷ்பா 24/21 என்பவருடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததாகவும், அங்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி சண்டையிட்டு, பிரச்சினை செய்து வந்துள்ளார்.

பெரியசாமி
பெரியசாமி

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிலையில், மேற்படி பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி, உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட கோம்பை கிராமத்தில் உள்ள பெரியசாமியின் வீட்டிற்கு அழைத்து வந்து 14.00 மணியளவில் மேற்படி லட்சுமி (எ) புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீட்டிலிருந்த மரப்பலகையை பயன்படுத்தி லட்சுமியின் தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், லட்சுமியின் மாமியார் செல்லம்மாள் 50/21, க. பெ.ஜெய்சங்கர் (எ) ரசாக் மற்றும் மாமியாரின் தந்தை போஜன் (எ) இப்ராஹிம் 70/21, த.பெ.பொன்னுசாமி ஆகியோர்கள் சேர்ந்து லட்சுமியின் மூக்கில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கொலையுண்டு இறந்துபோன லட்சுமி (எ) புஷ்பாவின் சகோரதர் கோவிந்தராஜ் 45/21, த.பெ. சின்னசாமி, 2/91 கன்னி கோயில் தெரு, சித்தாப்பாக்கம், மாம்பாக்கம், சென்னை என்பவர் கொடுத்த புகாருக்கு உப்பிலியபுரம் காவல் நிலைய குற்ற எண். 422/2021 U/s 302 IPC ன் படி 03.09.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் (Mahila) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில், நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் இன்று (14.082026) எதிரிகள் 1. பெரியசாமி 38/26, த.பெ.ஜெய்சங்கர், 2. செல்லம்மாள் 70/26, க. பெ.ஜெய்சங்கர் (எ) ரசாக், 3. போஜன் (எ) இப்ராஹிம் 86/26. த.பெ.பொன்னுசாமி, அனைவரும் கோம்பை, நெட்ட வேலம்பட்டி துறையூர் தாலுக்கா திருச்சி ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 5,000 அபராதம் வழங்கியும் தீர்ப்பளித்துள்ளார்.

விதுன்குமார்
விதுன்குமார்

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர இவ்வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த முன்னாள் உப்பிலியபுரம் காவல் ஆய்வாளர் விதுன்குமார் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த உப்பிலியபுரம் காவல் நிலைய நீதிமன்ற தலைமைக் காவலர் திருமதி. பிரபாவதி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப அவர்கள் பாராட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.