லஞ்ச ஒழிப்பில் அசத்திய அதிகாரி ! குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகர்: காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் – சிறப்புச் சேவை விருதுக்கு, விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) K. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

K. ராமச்சந்திரன், இதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் லஞ்சப் புகார்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஏடிஎஸ்பி K. ராமச்சந்திரன்
ஏடிஎஸ்பி K. ராமச்சந்திரன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைகள் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியதுடன், பொதுமக்களிடம் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

தற்போது விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ஏடிஎஸ்பி) பணியாற்றி வரும்  K. ராமச்சந்திரனின் காவல் பணியை அங்கீகரிக்கும் வகையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்துக்கு அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

காவல் துறையில் சிறப்பான சேவைக்காக கிடைத்துள்ள இந்த தேசிய அங்கீகாரம், விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.

குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் பெறும் ஏடிஎஸ்பி  K. ராமச்சந்திரனுக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.