விரசம், ஆபாசம் இல்லாத ‘மொத ராத்திரி’
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இளம் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி டைரக்ஷனில் உருவாகி வரும் 21- ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படம்’மொத ராத்திரி’. இதில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் நேற்று (ஆக.13) மதியம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…..
தயாரிப்பாளர் ரவி சங்கர்
“ராஜா இந்தக் கதையை சொன்னபோதே உடனே எங்களுக்கு பிடித்து விட்டது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போல சின்ன பட்ஜெட்டில் வந்த நல்ல படங்கள் வெற்றியடைந்துள்ளது. அதுபோல, இந்தப் படமும் நல்ல கதைக்களத்துடன் வருகிறது”.
இயக்குநர் வெங்கடேஷ்
“அங்காடி தெரு’ படத்திற்கு பின்பு நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தான் எனக்கு அதிகம் வந்தது. ஆனால், இதில் வித்தியாசமான கதாபாத்திரம். நடிகர் ரிஷிகாந்த் நிச்சயம் பெரிய நடிகராக வருவார்”
நடிகர் சேத்தன்
“என் மனைவி தேவதர்ஷினியைத் தான் நடிக்க கேட்டிருந்தார்கள். ஆனால் டேட் பிரச்சினை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. இது போன்ற புது அணியினருக்கு ஆதரவு கொடுக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி”.
இசையமைப்பாளர் பரத் சங்கர்
“படத்தின் இயக்குநர் ராஜா வெள்ளந்தியான மனிதர். ஆனால், படம் அதற்கு நேர் மாறாக வந்துள்ளது”.
சிறப்பு விருந்தினர்கள்…..
இயக்குநர் ஸ்ரீகணேஷ்
“இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும்”.
இயக்குநர் பாரி
“என்னைப் போன்று பல கனவுகளோடு கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வரும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் படங்களில் ஒன்றாக இந்த படத்தை நான் பார்க்கிறேன். ரிஷிக்காகவே இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். பெரிய படங்கள் எப்போதும் உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால், சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும்”.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
“ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடிப்பவர் ரிஷி. இந்தப் படத்தை பார்க்கும் பொழுது பாக்யராஜ் சாருடைய படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்தது”.
இயக்குநர் ‘அயலான்’ ரவிக்குமார்
“எதை படமாக எடுக்கிறோம் என்பதில் தான் ஒரு இயக்குநரின் திறமை உள்ளது. அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் சிறப்பாக எடுத்துள் ளார்”.

இயக்குநர் ராஜா கருப்பசாமி
“ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனால் தான் இந்த படம் இன்று உருவாகியுள்ளது. அவருக்கும் என் கதையின் ஆன்மாவை புரிந்து கொண்டு வாய்ப்பளித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த எனக்கு ஆதரவு கொடுத்த நண்பர்கள், குடும்பத்தினர், உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. என்னுடைய அனுபவத்திலிருந்து உருவான கதை தான் இந்தப் படம். இதில் துளியும் விரசம், ஆபாசம் இல்லை.என் வாழ்க்கை யின் அனைத்துப் பெண்களுக்கும் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்”.
ஹீரோ ரிஷிகாந்த்
“இப்படத்தின் கதையை ஷார்ட் ஃபிலிமாக ராஜா கொண்டு வந்தார். அதன் பிறகு ஆறு வருடம் பயணம் செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். என்னை விட்டுக் கொடுக்காத இயக்குநருக்கும், கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. நிச்சயம் குடும்பமாக இந்த படத்தை ரசிப்பீர்கள்”.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.