அங்குசம் பார்வையில் ‘லெனின் பாண்டியன் ‘

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு:’சத்ய ஜோதி பிலிம்ஸ் ‘ செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், டைரக்டர்: டி.டி.பாலச்சந்திரன், ஆர்டிஸ்ட்: கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஷ்ரித்தா ராவ், அர்ச்சனா ரவிச்சந்திரன் யுகேந்திரன், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், சுனில் , இளவரசு,  பிஎல் தேனப்பன், ஷரவண சக்தி,டி.சிவா,  இசை: இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு: எட்வின் சகாய், எடிட்டிங்: நாகூரான் ராமச்சந்திரன், காஸ்ட்யூம்: பெருமாள் செல்வம், ஆர்ட் டைரக்டர்: அத்தூரி ஜெயக்குமார், பிஆர்ஓ: ‘எய்ம்’ சதீஷ்.

சிவகங்கை மாவட்டம்  மானாமதுரையில் மனைவி சந்தனத்துடன்[ரோஜா] வசிக்கிறார் துரைராஜூ[கங்கை அமரன்]. அந்த மாவட்டத்தின் மணல் கொள்ளையர்களாக இருக்கிறார்கள், சிவகங்கை நகராட்சி சேர்மன் ரத்னமும் ஆடுகளம் நரேன்]  அவரது தம்பி ரவியும் [யுகேந்திரன்] . தான் பிரியமாக வளர்த்த மீனாட்சியை [ஆடு] மணல் கொள்ளையர்களின் லாரி அடித்துச் செத்ததை தாங்க முடியாமல், மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் கொலைக் கேஸ் கொடுக்க வருகிறார் துரைராஜு. அங்கே இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டால் அடித்து அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் வெகுண்டெழுந்த துரைராஜ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குப் போடுகிறார். அங்கே அவருக்கு நீதி கிடைத்ததா? மணல் கொள்ளையர்களின் கொட்டம் அடங்கியதா? இதான் இந்த ‘லெனின் பாண்டியன்’.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறார் மாறவர்மன் சுந்தரபாண்டியன்[ தர்ஷன் கணேசன்]. அப்பா இறந்த பிறகு கருணை அடிப்படையில் போலீஸ் வேலை கிடைத்ததால், இன்ஸ்பெக்டர் ஷரவண சுப்பையாவால் கருணையே இல்லாமல் நடத்தப்படுகிறார். வெறும் ஸ்டேஷன் டூட்டி போட்டே அவரை இம்சைப்படுத்துகிறார் ஷரவண சுப்பையா. இதனால் ரொம்பவே கூனிக்குறுகும் தர்ஷன், கருணையால கிடைச்ச வேலையைவிட்டுவிட்டு தகுதிக்கேற்ப வேலை தேட முயற்சிக்கும் போது, அவருக்கு ஆறுதல் கூறுகிறார் மனைவி ஷ்ரித்தா ராவ்.

இந்த நேரத்தில் தான் துரைராஜ் தொடுத்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி பீமாராவ் கொன்னமுத்து [ ஜார்ஜ் மரியன்],  மணல் கொள்ளையர்களிடமிருந்து துரைராஜின் உயிரைப் பாதுகாப்பாக தர்ஷன் கணேசனை நியமித்து உத்தரவு போடுகிறார்.   அதன் பின் நடக்கும் வரியோர்களின் உரிமைப்போரை ரொம்பவே ஆழமாகப் பதிவு செய்துள்ளார் டைரக்டர் டி.டி.பாலச்சந்திரன்.

நீதிமன்றத்தில் சிவகங்கை மாவட்டத்தின் எஸ்.பி., டி.எஸ்.பி.  இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் உட்பட அனைவரையும் நிற்க வைத்து ஒட்டு மொத்த போலீஸ் டிபார்ட் மெண்ட்டுக்கும் ஜார்ஜ் மரியன் மூலம் சுளுக்கெடுத்திருக்கிறார் டைரக்டர். தன் கண் எதிரேயே கங்கை அமரனை வல்கராகப் பேசும் போஸ் வெங்கட்டுக்கு ஜார்ஜ் மரியன் கொடுக்கும் பனிஷ்மெண்ட் இருக்கே..அடடா…அடடா இப்படி நடந்த எம்புட்டு நல்லாருக்கும் என கைதட்ட வைக்கிறது. தனக்கு டவாலியாக இருக்கும் சுனிலிடம் ஜமீந்தார்-வேலைக்காரன் கதையை ஜார்ஜ் மரியன் சொல்லும் சீனில் தியேட்டரே அதிருகிறது.

“நீங்க கவர்மெண்ட் சர்வெண்ட், நான் கவர்மெண்ட் எம்ப்ளாய்” விஏஓவாக வரும் அர்ச்சனா ரவிச்சந்திரன் பேசும் டயலாக்கும், “நீங்க கவர்மெண்ட் ஆபீசர்ஸ் தான், சூப்பர் பவர் மனுசன் இல்லை” என எஸ்.பி.யைப் பார்த்து ஜார்ஜ் மரியன் பேசும் டயலாக்கும் தான் ‘லெனின் பாண்டியனின்’ பேஸிக் ஸ்ட்ராங் லைன்.

மானாமதுரையின் துரைராஜுவாகவே வாழ்ந்திருக்கிறார் நம்ம அண்ணன் கங்கை அமரன். எப்போதுமே கசங்கிய அழுக்குச் சட்டை, தளர்நடை என வந்தாலும் தனக்கு  கன்மேன் பாதுகாப்பு கிடைச்சதும் தர்ஷனுடன் நடந்து வரும் போது, அந்த தளர் நடையிலும் கம்பீரத்தையும் அவசியமான திமிரையும் வெளிப்படுத்தும் சீனில் சீனியர் நடிகர்களுக்கே சவால்விட்டுள்ளார் அண்ணன் கங்கை அமரன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவரது மனைவி சந்தனமாக சீனியர் நடிகை ரோஜா, எல்லா சீன்களிலும் நடிப்பில் மணம் வீசுகிறார். சிவகங்கை வட்டார பேச்சு மொழியை மிகச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார் ரோஜா.

நடிகர்திலகம் சிவாஜியின் பேரன், ராம்குமாரின் மகன் தர்ஷன் கணேசன், டிஸ்டிங்ஷனில் பாஸாகிவிட்டார். இவருக்கும் ஷ்ரித்தா ராவுக்குமிடையிலான காதல், மோதல், ஊடல், கூடல் எல்லாமே அளவுடனும் நிறைவுடனும் இருக்கு. இரண்டு காட்சிகளில் வந்தாலும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் விஏஓ அர்ச்சனா ரவிச்சந்திரன்.

ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட் மூவர் கூட்டணி செமத்தியாக வில்லன் ஆட்டம் ஆடியிருக்கிறார்கள். ஷ்ரித்தா ராவின் அப்பாவாக தேனப்பன், மானாமதுரை ஸ்டேஷன் ஹெட் கான்ஸ்டபிளாக இளவரசு ஆகியோரும் ஓகே தான்.

இந்திய சினிமாவில் பின்னணி இசையில் எப்பவுமே நான் தான் கிங் என இப்போதும் நிரூபித்துவிட்டார் இசைஞானி இளையராஜா. ‘லெனின் பாண்டியன்’ என டைட்டில் கார்டு போட்டதும் போட்டாருபாருங்க ஒரு பிட், அடேங்கப்பா… அதே போல் தர்ஷன் கைகளின் துப்பாக்கியை வாங்கும் போது, ஜமீன் -வேலையாள் கதையைச் சொல்லி முடித்துவிட்டு ஜார்ஜ் மரியன் கோர்ட்டுக்குள் எண்ட்ரியாகும் போது, கங்கை அமரன் –ரோஜா எபிசோடில் ‘முதல் மரியாதை’யின் பேக்ரவுண்ட் மியூசிக், கருப்பு சாமியைக் காட்டும் போது ஓங்காரக் குரல் ….இப்படி லெனின் பாண்டியன் முழுக்க இசைஞானியின் இசை ராஜாங்கம் தான்.

இடைவேளைக்குப் பிறகு, ஷ்ரித்தா ராவின் தலையில் அடிபடுவது, ஆஸ்பத்திரியில் தர்ஷன் கதறுவது, கண்ணீர் விடுவது, அப்புறம் ஷ்ரித்தாவுக்கு புத்தி பேதலிப்பதுன்னு மொத்தமா ட்ராக் மாறி  நம்மை கொஞ்சம் அல்லாட வைக்கிறது.

என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் இந்த ‘லெனின் பாண்டியன்’ நம்ம காம்ரேட் என்பதில் பெரும் மகிச்சி, பேருவகை.

அங்குசம் பார்வையில் ‘லெனின் பாண்டியன் ‘ 68/100

  —  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.