கேள்விகளால்…. துளைத்த நெல்சன்… கூல் சூப்பர்ஸ்டார்…

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ரஜினியின் விழா மேடை பேச்சுக்களுக்கு தனி ரசிக கூட்டம் உண்டு. போகிற போக்கில் பெரும் தத்துவங்களை, B school பாடங்களை ஓரிரு வரியில் தட்டிவிட்டு செல்வார். சமீபத்தில் வெளியான ஜெயிலர்2 promo நிகழ்வில் நெல்சனுடன் நடந்த கேள்வி பதில் கலந்துரையாடல் டாப் நாச்.

முதற்கண் இருவருக்கும் ஒரு நல்ல வைப் உள்ளது தெரிகிறது. நெல்சன் ஓப்பனாக கொஞ்சம் கலாய்க்கிறார். அதை இவ்வளவு உச்சத்தில் இருந்தும், பெருந்தன்மையுடன் ஜாலியாக எடுத்துக் கொண்டு, ஆனால் சமயம் பார்த்து திருப்பி தருகிறார் ரஜினி.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நெல்சன் முக்கியமாக மூன்று விசயங்களை பற்றி ரஜினி அவர்களிடம் கேட்கிறார்.

முதலாவது, Work Ethics. ஐம்பது வருடங்கள் தாண்டி எப்படி அதே உத்வேகம் குறையாமல், டிசிப்ளினுடன் அவரால் வேலையை செய்ய முடிகிறது என்கிற கேள்விக்கு, முதலில் வேலையை ரசித்து செய்ய வேண்டும் என்கிறார். வேலையை வேலை என நினைக்காமல், அதை உங்களுக்கு பிடித்த விளையாட்டு என நினைங்க என்கிறார்.

Nelson Dilipkumar: நெகட்டிவ் கட் பண்ணி அனுபிறீங்க.. அது என்ன ஹிமாலயன் ரகசியமா? – ரஜினியிடம் கேள்வி கேட்ட நெல்சன்! | TV9 Tamil Newsஅடுத்து, பாசிட்டிவாக எப்படி இருக்கிறீர்கள்?  எப்ப யார் பேசினாலும் நெகட்டிவிட்டி கட் எப்படி செய்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கிறார். அதுக்கு ரஜினி, நம்ம என்ன நினைக்கிறோமோ அது தான் செயலில் வரும். so thinking important என்கிறார். ஒருவரை பற்றி கெட்டதா கெடுதல் நினைத்தால் அது முதலில் நம்மை தான் பாதிக்கும் என்கிறார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

முத்தாய்ப்பாக , நெகட்டிவ் யோசித்தாலும் பாசிட்டிவ் யோசித்தாலும் ஒரு நாளைக்கு 24 hours தானே என்று முடிக்கிறார்.

அடுத்ததாக, Humbleness. தன்னடக்கம் இல்லாத பல ஜந்துக்கள் நம் வாழ்வில் நம்மை சுற்றி தினம் வலம் வந்து கடுப்பேற்றுவதை நாம் அறிகிறோம்.

என் ஆழ் மனதில் நான் முதலில் கண்டக்டர் என ஊறிடுச்சு. ஒரு பஸ் கண்டக்டர் ன்னு நான் நினைக்கும் போது, தானா humble ஆ தானே இருந்து ஆகணும் என்கிறார்.

அதாவது, எங்கிருந்து வந்தோம், நம் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை உணர்ந்து வந்தால், இந்த தன்னடக்கம் அப்படியே தானாக வந்து விடும் என்கிறார் தலைவர் அவர் ஸ்டைலில்.

கொஞ்ச நேர காணொளி தான். ஃபன் க்கு ஃபன். அதே சமயத்தில், செம்ம விசயங்களை தெளித்து செல்கிறார் ரஜினி என்கிற காந்தம்.

—  இரா. இராஜகோபாலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.