Friday, November 27, 2026 | 2:37 PM IST

அங்குசம் பார்வையில் ‘ஜெடூசி’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: நடராஜ் ஏகாம்பரம் & விஜயசாந்தி ஸ்ரீதர், டைரக்டர்: நடராஜ் ஏகாம்பரம், ஆர்டிஸ்ட்: ஸ்ரீதர், ஸ்வேதா, சினியுதன், ஏ.வெங்கடேஷ், பிளாக் பாண்டி, பவா செல்லதுரை, அருவி மதன், ஒளிப்பதிவு: நாக அர்ஜுன், இசை: விக்னேஸ்வரன், பிஆர்ஓ: சரண்

பெண்கள் நீளமான தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டை போட்டு, சொருகும் கொஞ்சம் நீளமான ஊசிக்குப் பெயர் தான் ‘ஜெடூசி’ . இந்த ஜெடூசியை வைத்து படத்தின் ஆரம்பத்தில் இருந்து இடைவேளை வரை ஏழெட்டு  கொலைகள் நடக்கின்றன. இந்தக் கொலைகள் எல்லாமே ஒரே பேட்டனில் நடந்திருப்பதால் போலீஸ் டீம் ரொம்பவும் குழம்பி, கொலைகாரனைப் பிடிக்க முடியாமல் திணறுகிறது. இடைவேளை விடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கரெக்டாக ஸ்மெல் பண்ணி, கொலைகாரனான ஹீரோ ஸ்ரீதரை தூக்குகிறது போலீஸ்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இம்புட்டுப் பேரை ஹீரோ ஏன் கொலை பண்ணினார்? இதான் இந்த ‘ஜெடூசி’க்குத்து.

Zedusiகதைக்கு ரொம்பெல்லாம் மெனக்கெடல டைரக்டர் நடராஜ் ஏகாம்பரம். 2008-ல் மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் டைரக்‌ஷனில் வந்து ஹிட்டான ‘சிந்தாமணி கொலைக் கேஸ்’ தமிழில் ஆர்கே நடிப்பில் அதே ஷாஜி கைலாஷ் டைரக்‌ஷனில் ‘எல்லாம் அவன் செயல்’ என்ற பெயரில் வந்தது. அதை அப்படியே காப்பி அடித்து, அதற்கு மலைவாழ் பழங்குடி மக்கள் என்ற டிங்கரிங் அடித்து ‘ஜெடூசி’யாக்கிவிட்டார்.

திருவண்ணாமலை டவுணில் லேப்-டாப் & சிசிடிவி கேமரா மெக்கானிக்காக இருக்கிறார் ஹீரோ ஸ்ரீதர். இவரின் முதலாளியாக ப்ளாக் பாண்டி. ஸ்ரீதரை லவ் பண்ணும் போலீஸ் இன்ஃபார்மாராக சினி யுதன், ஸ்ரீதரின் முறைப்பெண்ணாக ஹீரோயின் ஸ்வேதா, கல்லூரி அதிபராக காம வெறியனாக டைரக்டர் ஏ.வெங்கடேஷ், போலீஸ் டி.எஸ்.பி.யாக அருவி மதன், இன்னொரு போலீஸாக ஒரு பெண் நடிகை, ஸ்வேதாவின் அப்பாவாக பவா செல்லதுரை, அம்மாவாக ஜெயந்தி மாலா, எஸ்.பி.யாக டைரக்டர் நடராஜ் ஏகாம்பரம் அப்புறம் சில கேரக்டர்களில் சில இளம் பெண்கள் என ஏகப்பட்ட பேர் நடித்திருக்கிறார்கள்.

Zedusiஇதில் மலைவாழ் பழங்குடியினப் பெண் காவேரியாக நடித்துள்ள ஸ்வேதாவின் பெர்ஃபாமென்ஸ் ஓகே. இதற்கு அடுத்து சினி யுதனின் நடிப்பும் ஓகே. ஆனால் அனுபவப்பட்ட நடிகர்களான ஏ.வெங்கடேஷும் அருவி மதனும் பல சீன்களில் திணறியிருப்பதற்கு டைரக்டரின் அனுபவமின்மை தான்  காரணமாக இருக்க முடியும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

‘பருத்தி வீரன்’ கார்த்தி போல டவுடர் தெரிய மடித்துக் கட்டியிருக்கும் கைலி, லேசான முறுக்கு மீசை, அடர் தாடி என ஹீரோ ஸ்ரீதரைக் காட்டியிருக்கிறார் நடராஜ் ஏகாம்பரம். எதுவுமே ஒர்க் அவுட்டாகவில்லை என்பது தான் பரிதாபம். தனது முறைப்பெண்ணுக்கு நடந்த கொடூரத்தை கோர்ட்டில் சொல்லும் போது, ஏதோ வானிலை அறிக்கை மாதிரி வாசிக்கிறார் ஹீரோ.

Zedusiஇதைவிடக் கொடுமை க்ளைமாக்ஸில் கோர்ட் வெராண்டாவில் பெண் நீதிபதியைப் பார்த்து ஏ.வெங்கடேஷ் பல்லிளிப்பது தான். ஒவ்வொரு கொலை நடந்த பின் வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெண்மணி, “ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட் ஆட்கள் வந்தாச்சா?, ஏதாவது எவிடென்ஸ் கிடைச்சுதா? ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியாச்சா? பாடியை ஜி.எச்.சுக்கு அனுப்புங்க” என இதைத்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறார். நமக்கு கடுப்பு கிளம்புன மாதிரி டி.எஸ்.பி.அருவி மதனுக்கும்  கிளம்பியிருக்கும் போல. “சார்…. அதே ஸ்ப்ரே….” என ஃபாரன்ஸிக் ஆள் ஒருத்தன் இழுக்கும் போது, “இதைத்தான்யா எல்லா இடத்திலும் சொல்லிக்கிட்டிருக்க” என கடுப்பாகி எரிந்து விழுகிறார் அருவி மதன்.

இந்த மாதிரியான சின்ன பட்ஜெட், சின்ன நடிகர்களின் படங்களில் கதை ரொம்ப சுமாராக அமைந்தாலும் திரைக்கதையாலும் சீன்ஸ் மேக்கிங்காலும் கொஞ்சமாச்சும் ரசிக்க வைப்பார்கள் சில டைரக்டர்கள்.

ஆனால் இந்த ‘ஜெடூசி’க்கு காப்பியடிக்க நல்ல கதை கிடைத்தும் மேக்கிங்கில் சொதப்பிவிட்டார் டைரக்டர் நடராஜ் ஏகாம்பரம்.

அங்குசம் பார்வையில் ‘ஜெடூசி’ 35/100

—  ஆண்டவர்   

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.