Thursday, November 26, 2026 | 1:44 PM IST

அங்குசம் பார்வையில் ‘ஆக்டோபஸ்’ ( வெப் சீரிஸ்)

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: லிஸா பி.சந்திரன், ஆதித்யா ராஜு, டைரக்டர்: ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஆர்டிஸ்ட்: அஷ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், சித்து குமரேசன், வினோத் கிஷன், கலைவாணி பாஸ்கர், ஒளிப்பதிவு: ஆர்.கண்ணா, இசை: தீபன் சக்ரவர்த்தி, எடிட்டிங்: ராம் பாண்டியன், பிஆர்ஓ: சதீஷ் & சிவா ( எய்ம்).

விழுப்புரம் மாவட்டம் வாணியமங்கலம் தான் கதைக்களம். அங்கு பத்து-பனிரெண்டு வீடுகள் இருக்கும் அன்பு நகர் குடியிருப்புக்கு புதிதாக வருகிறார்கள் அஷ்வின் குமார்-சித்து குமரேசன் தம்பதிகள். வந்த அன்றே அஷ்வின் குமாரின் சேடிஸ்ட் தனத்தைப் பார்த்து மிரட்சியாகிறார் அர்ச்சனா ரவிச்சந்திரன். போகப் போக அஷ்வினின் குடிகார நடவடிக்கைகள் அந்தக் குடியிருப்பு வாசிகளுக்கிடையே சந்தேகத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இந்த  நிலையில் அங்கே இருப்பவர்கள் அனைவருடனும் குறிப்பாக அர்ச்சனா ரவிச்சந்திரனுடன் மிகவும் அன்பாகப் பழகும் சித்து குமரேசன் திடீரென காணாமல் போகிறார். இதை போலீசில் கம்ப்ளெண்ட் பண்ணுகிறார்கள் குடியிருப்பு வாசிகள். கோர்ட்டிலும் சாட்சி சொல்கிறார்கள். சித்து குமரேசனின் கதி என்ன? இதான் இந்த செம ட்விஸ்டான ‘ஆக்டோபஸ்’.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஜி-5 ஓடிடியில் வரும் 27-ஆம் தேதி முதல்ஸ்ட்ரீமிங் ஆகிறது.

'ஆக்டோபஸ்'முள்ளை முள்ளால் எடுப்பது போல, சாதி ஆணவக் கொலையக் கண்டு பிடிக்க, இன்னொரு கொலை நாடகத்தை அரங்கேற்றி, சாதி வெறியர்களை அடையாளம் காட்டி ஜெயிலுக்கு அனுப்பும் பக்காவான க்ரைம்-இன்வெஸ்டிகேஷன் ஜானரில் மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார் டைரக்டர் ஜெயச்சந்திர ஹாஷ்மி. ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு ட்விஸ்ட் வைத்து, அதை அடுத்த எபிசோடில் அவிழ்த்து என செம இண்ட்ரெஸிங்காக கொண்டு போயுள்ளார் டைரக்டர். அதிலும் குறிப்பாக நான்கு எபிசோடுகள் வரை அஷ்வின் குமாரை கொடூரக் சைக்கோவாகக் காட்டி, கடைசி எபிசோடில் அதை டோட்டலாக மாற்றி சூப்பர் ’குட் கேம்’ அனுபவத்தைத் தருகிறார் டைரக்டர்.

'ஆக்டோபஸ்'வினோத் கிஷன் -கலைவாணி பாஸ்கர் லவ் போர்ஷன் தான் இந்த வெப் சீரிஸின் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட். அதை கனகச்சிதமான கட்டிடமாக எழுப்பி, க்ளைமாக்ஸ் எபிசோடில் காட்சிப்படுத்தி அசத்திவிட்டார் டைரக்டர் ஜெயச்சந்திர ஹாஷ்மி.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில் அர்ச்சனா ரவிச்சந்திரன் தான் டாப் பெர்ஃபாமெர். கலைவாணி பாஸ்கர் கொல்லப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து தனது அப்பாவிடம் குமுறி வெடிக்கும் காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனாலும் சீரிஸின் பில்லர் அஷ்வின் குமார் தான் என்பதில் சந்தேகமில்லை. க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் வக்கீல் அவதாரம் அபாரம். குடியிருப்புவாசிகளாக நடித்த பெண்கள்-ஆண்கள் எல்லோருக்குமே சமமான நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறார் டைரக்டர்.

'ஆக்டோபஸ்'தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை சீரிஸின் டெம்போவை ஏற்றுகிறது. பெரும்பாலான காட்சிகள், அன்பு நகர் குடியிருப்பிலும் கோர்ட் ஹாலிலும்  நடந்தாலும் அது தெரியாத அளவுக்கு கேமரா கோணங்களில் வித்தை காட்டியிருக்கார் ஆர்.கண்ணா. எந்த இடத்திலும் சீன்கள் ஜெர்க் ஆகாமல் க்ரிப்பாக போவதற்கு எடிட்டர் ராம் பாண்டியன் உதவியிருக்கார்.

அன்பு நகர் குடியிருப்பு, அதில் சாதி ஆணவக் கொலை, “இந்த சாதி ஆணவக் கொலையை நம் காலத்திலாவது ஒழித்தே ஆகவேண்டும்” நீதிபதி பகவதி பெருமாள் பேசும் க்ளைமாக்ஸ் வசனம். டைரக்டர் ஜெயச்சந்திர ஹாஷ்மியின் சமூக அக்கறைக்கு சாட்சிகள்.

சபாஷ் ஹாஷ்மி.

அங்குசம் பார்வையில் ‘ஆக்டோபஸ்’ ( வெப் சீரிஸ்) 65/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.